நடிகை கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கவுஷல் ஆகிய இருவரும் விரைவில் நிச்சயதார்த்தம் செய்யப்போவதாக வதந்தி பரவிய நிலையில், அது உண்மை இல்லை என்று கத்ரீனாவின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலிவுட்டில் அதிகம் கிசுகிசுக்கப்படும் நடிகைகளில் ஒருவராக கத்ரீனா கைஃப் உள்ளார். பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான சல்மான் கான், அக்‌ஷய் குமார், ரன்பீர் கபூருடன் ஆகியோருடன் கிசுகிசுக்கப்பட்டு வந்தார். தற்போது, ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ புகழ் விக்கி கவுசலுடன், கத்ரீனா கைஃப் காதல் உறவில் இருப்பதாக கூறப்படுகிறது.


இந்த நிலையில், இன்று அதிகாலையில், அவர்களின் உறவு அடுத்த கட்டத்திற்கு செல்லும் செய்தி இணையத்தில் வெளிவந்தது. அதாவது, இந்த ஜோடி நிச்சயதார்த்தத்திற்கு முன்னதாக நடத்தப்படும் ரோகா விழாவை விரைவில் நடத்த உள்ளதாக வதந்தி பரவியது. இதனைத் தொடர்ந்து, இருவரின் ரசிகர்களும் இணையத்தில் இது தொடர்பாக கருத்துகள் பதிவிட்டு வந்த நிலையில், இது பொய்யான தகவல் என்று கத்ரீனாவின் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.




ஹர்ஷவர்தன் கபூர், விக்கி கவுசல் மற்றும் கத்ரீனா கைஃப் பற்றிய உறவு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இன்று கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கவுசலின் நிச்சயதார்த்த செய்தி சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், வதந்திகளில் உண்மையில்லை என்று நடிகை குழு தெளிவுபடுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில், சில செய்தி போர்ட்டல்களில், இருவரும் விரைவில் தங்கள் ரோகா விழாவை நடத்தப் போகிறார்கள் என்றும், அதைத் தொடர்ந்து நிச்சயதார்த்தம் நடைபெறும் என்றும் செய்தி வெளியிட்டனர். இது பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.







கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கவுஷல் ஆகியோர் முதன்முறையாக ஒரு நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் சந்தித்தனர். பின்னர்,  இருவரும் ஓரிரு முறை சந்தித்த பிறகு டேட்டிங் செய்யத் தொடங்கியதாக கூறப்படுகிறது. அவர்கள் பல சமயங்களில் ஒன்றாகக் காணப்பட்டனர். சமீபத்தில், சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானியின் ஷெர்ஷாவின் பட திரையிடலில் ஒன்றாகக் காணப்பட்டனர். இருப்பினும், படம் முடிந்த பிறகு அவர்கள் ஒன்றாக வெளியே வரவில்லை. விக்கி முதலில் தியேட்டரை விட்டு வெளியே வந்தபோது, ​​கத்ரீனா வெளியேறுவதற்கு முன்பு தன் சகோதரி இசபெல்லா கைஃப்பிற்காக காத்திருந்தார். அதுதொடர்பான வீடியோவும் வெளியாகி வைரலாகி வருகிறது.


Gal Gadot| ரீல் லைஃப்ல மட்டுமில்லைங்க.. ரியல் லைஃப்லயும் வொண்டர் வுமன்தான்! - கேல் கேடட்டின் வைரல் புகைப்படம்!