கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான வொண்டர் வுமன் திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகை ‘கேல் கேடட்’ இவருக்கு உலகம் முழுக்க ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.  கடந்த 2008-ஆம் ஆண்டு ஜான் வர்சானோவை  கேல் கடாட் திருமணம் செய்துகொண்டார். திருமணமாகியும் ஏராளமான படங்களில் நடித்து அசத்தி வருகிறார் கேடட். பேரழகியான கிளியோபட்ராவின் வாழ்க்கையில் நடிப்பதற்கு கேல் கேடட்டை ஒப்பந்தம் செய்யப்பட்ட பொழுது அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பின.  ஆஸ்கேன்ஸாய் யூத பாரம்பர்யத்தை சேர்ந்த கேல் கடோட் எகிப்தியன் பேரழகியாக நடிப்பது சிகப்பு நிறத்திற்கு  முக்கியத்துவம் கொடுக்கும் வழக்கமான தவறின் தொடர்ச்சி என உலகம் முழுவது எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. கிளியோபட்ராவாக நடிக்க கருப்பு நிறத்தில்  இருக்கும் நடிகையை ஏன் தேர்வு செய்ய கூடாது, இது வரலாற்றையே மாற்றும் செயலாக அல்லவா உள்ளது என  என பலரும் கேள்வி எழுப்பியது நினைவு கூற தக்கது. 






சமூக வலைத்தளங்களில்  படு ஆக்டிவாக இருப்பவர் ஹாலிவுட் நடிகை கேல் கேடட்.  இவருக்கு  திருமணமாகி அல்மா என்ற 9 வயது மகளும், மாயா என்ற 4 வயதும் மகளும் உள்ள நிலையில், மூன்றாவதாகவும் அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அந்த குழந்தைக்கு டேனியாலா என பெயர் வைத்துள்ளனர். இந்நிலையில் ஷூட்டிங் சமயத்தில் மேக்கப்  போடும் கேல் கேடட் , தனது தாய் பாலை சேமிக்கும் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அதற்கு கேப்சனாக ‘இதுதான் நான் திரைக்கு பின்னால், ஒரு தயாக இருக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் பலரின் கவனத்தை பெற்றுள்ளது. வேலைக்கு செல்லும் பெண்கள் பலரும் தாய்பாலை தங்கள் குழந்தைகளுக்காக சேமித்து வைத்துவிட்டு செல்வது வழக்கம். ஏனெனில் ஒரு குழந்தைக்கு தேவையான அத்தனை அடிப்படை சத்துக்களும் தாய் பாலின் மூலமாகத்தான் கிடைக்கிறது என்பது நாம் அறிந்ததே. இதில் நடிகைகள் மட்டும் விதிவிலக்கா என்ன!






பொதுவாக நடிகைகள் தாய்ப்பால் கொடுக்க விரும்ப மாட்டார்கள் என்ற பரவலான கருத்து உள்ளது. ஆனால் அதனை முறியடிக்கும் வகையில் பல நடிகைகள் தாய் பால் குறித்த விழிப்புணர்வை முன்னெடுத்து வருகின்றனர். இதற்காக பிரத்யேகமாக ஃபோட்டோ ஷூட்டும் செய்து அதனை தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் உலக தாய்பால் வாரம் கொண்டாடப்பட்டது. அப்போது பல பிரபலங்கள் தங்கள் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு தாய்ப்பால் குறித்த அனுபவங்களை பகிர்ந்து வந்தனர்.


குறிப்பாக நடிகர் நகுலின் மனைவி ஸ்ருதி தாய்ப்பால் குறித்து பதிவிட்ட விழிப்புணர்வு  புகைப்படம் இணையத்தில் வைரலானது. அதில் ‘குழந்தைக்கு ஒரு வயதுக்கு மேலும் தாய்ப்பால் கொடுங்கள் என வலியுறுத்தியிருந்தார். மேலும் அது தனது சொந்த அனுபவங்களையும் ஸ்ருதி பகிர்ந்திருந்தார். இந்த விழிப்புணர்வு புகைப்படத்தில் நகுல், ஸ்ருதி மற்றும் அவரது குழந்தை ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். நகுலும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இது குறித்து பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.