ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்


கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடந்த நவம்பர் 10 ஆம் தேதி வெளியானத் திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே சூர்யா , நிமிஷா சஜயன் , நவீன் சந்திரா, சஞ்சனா நடராஜன், சத்யன் , ஷைன் டாம் சாக்கோ, இளவரசு உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்திருந்தார்கள். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்து ஸ்டோன் பெஞ்ச் ப்ரோடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்திருந்தது. 


அரசியல் லாபத்திற்காக பழங்குடி மக்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் , சினிமா என்கிற கலைவடிவம் மக்களிடம் ஏற்படுத்தும் தாக்கம் என இரண்டையும் நகைச்சுவை , உணர்ச்சிகள் நிறைந்த ஒரு திரைப்படமாக கார்த்திக் சுப்பராஜ் இந்தப் படத்தை இயக்கியிருந்தது அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திருந்தது.


வெற்றிகரமான 50-வது நாள்


கார்த்திக் சுப்பாராஜ் முன்பாக இயக்கியப் படங்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் குழு இருக்கிறது. பெரிதாக லாஜிக் எதுவும் இல்லாமல் மாஸான காட்சிகள் ஸ்டைலான ஃபிலிம் மேக்கிங் இவற்றுக்காக அவரது படங்களை ரசிகர்கள் ஆர்வமாக கருதி வந்தார்கள் . ஆனால் ஜிகர்தண்டா படத்திற்கு பின் கார்த்திக் சுப்பராஜ் தமிழி சினிமாவின் மிக முக்கியமான இளம் தலைமுறை இயக்குநர்களில் ஒருவராக மாறியுள்ளார். சமூக கருத்துக்கள் உள்ளடங்கிய ஒரு கதையை அனைவரும் பார்த்து ரசிக்கும் வகையிலான ஒரு படமாக ஜிகர்தண்டா படம் வெளியானது. கொரோனா பரவல் காரணமாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ஜகமே தந்திரம் மற்றும் மஹான் ஆகிய இரண்டு படங்களும் ஓடிடி தளத்தில் வெளியாக வேண்டிய சூழல் ஏற்பட்டது. சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான கார்த்திக் சுப்பராஜின் ஜிகர்தண்டா விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.






ஜிகர்தண்டா படம் வெளியாகி 50 நாட்கள் நிறைவடைய இருக்கிறது. இதனை கொண்டாடும் விதமாக ஜிகர்தண்டா படத்தின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படக்குழுவினர் நாளை சென்னை கமலா திரையரங்கில் ரசிகர்களுடன் இந்தப் படத்தை பார்க்கத் திட்டமிட்டுள்ளது.  இவர்களோடு சேர்ந்து படத்தை பார்க்க வரும்படி ரசிகர்களுக்கு தனது எக்ஸ் தளத்தில்  அழைப்பு விடுத்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் . 




மேலும் படிக்க : Mission Chapter-1 Trailer: ”அச்சம் என்பது இல்லையே” - அருண் விஜய் நடித்த மிஷன் சாப்டர்-1 டிரெய்லர் வெளியீடு


கல்கியின் பொன்னியின் செல்வன் வேற மாதிரி.. திரைப்படம் மணியின் ஓவியம் - இளையராஜா