தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலில் அன்னத்தை காப்பாற்ற போலீஸ் அதிகாரியாக பவானி களமிறங்கி அசால்ட் செய்ய அவளுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் வரும் நாட்களில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க...


அதாவது, மாப்பிள்ளை வீட்டார் எல்லாரையும் கோவிலுக்கு வர சொல்ல பவானி தன்னால் வர முடியாது என சொல்ல, அமுதா பவானியாக ரெடியாகி கிளம்பி கோவிலுக்கு வர, மாப்பிள்ளை வீட்டார் நிச்சயம் என சொல்ல அமுதா, அன்னம், மாணிக்கம், செந்தில் ஷாக்காகின்றனர். செந்தில் அமுதாவிடம் வேற வழியே இல்லை நீ பவானியா நடிச்சுதான் ஆகணும் என சொல்கிறான்.


அதன் பிறகு அமுதா பவானியாக நடிக்க நிச்சயம் நடைபெறுகிறது. மாப்பிள்ளை அமுதாவுக்கு மோதிரம் போடப்போக அமுதா தட்டிவிட்டு , மாலையை கழட்டி விட்டு, நான் பவானி இல்லை அமுதா என்கிற உண்மையை சொல்ல மாப்பிள்ளையின் அம்மா கோபப்பட்டு மாப்பிள்ளையை அழைத்து செல்கிறான். அதன் பிறகு மாணிக்கம் பவானியிடம் நடந்தவற்றை சொல்ல, பவானி சந்தோஷப்படுகிறாள்.


அதனை தொடர்ந்து டாக்டர் அமுதாவிடம் பவானிக்கு தலையில் அடிபட்டதால் மூளையில் கட்டி உருவாகி இருப்பதாக சொல்ல அமுதா அதிர்ச்சி அடைகிறாள். மேலும் டாக்டர் பவானி இன்னும் சில மாதங்கள் தான் உயிரோடு இருப்பார் என சொல்ல அமுதா ஜோசியரிடம் கேட்க, அவரும் பவானி இன்னும் ஒரு மாதம் தான் உயிரோட இருப்பாங்க, அவங்களுக்கு கல்யாணம் செஞ்சா கட்டங்களோட அமைப்பு மாறி உயிரோட இருக்க வாய்ப்பிருக்கு என சொல்கிறார்.


இதனையடுத்து மாப்பிள்ளை அமுதாவிடம் நான் பவானியை கல்யாணம் பண்ணிக்கிறேன் என சொல்ல, அமுதா பவானி இன்னும் கொஞ்ச நாள் தான் உயிரோடு இருப்பாள் என்கிற உண்மையை சொல்கிறாள். அதன் பிறகு அமுதா, பவானியை செந்திலுக்கு கல்யாணம் செய்து வைக்கலாம் என முடிவு செய்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். 


மேலும் படிக்க 


Safest City: வேற லெவல்! பெண்கள் பாதுகாப்பில் முன்னோடியாக விளங்கும் நம்ம சென்னை! வட மாநிலங்களின் கதி?


Magalir Urimai Thogai Scheme: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை; மேலும் 2 லட்சம் பேர் சேர்ப்பு - வெளியான முக்கிய தகவல்