தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபா கார்த்திக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க கையில் இருக்கும் மருதாணியை பார்க்காமல் தவறவிட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது மறுநாள் காலையில் தீப கார்த்திக்கிடம் என்னை கோவிலுக்கு கூட்டிட்டு போறீங்களா என்று கேட்க அவன் சம்மதம் தெரிவித்து கோவிலுக்கு அழைத்து வருகிறான்.
கோவிலுக்கு வந்த இவர்கள் கைரேகை பார்ப்பவரை பார்த்து கைரேகை கேட்கலாம் என்று அவரிடம் செல்ல முதலில் கார்த்திக் தனது கையை காட்டுகிறான். நீங்க ஒரு விஷயத்தை தேடிக்கிட்டு இருக்கீங்க கைக்கு எட்டினது கைநழுவி போயிடுச்சு என்று சொல்ல பல்லவி பற்றி சொல்றாங்களோ என நினைத்துக் கொள்கிறார்.
அதோடு கவலைப்படாதீங்க நீங்க நெனச்சது உங்கள நோக்கி வரும் எனவும் சொல்லி முடித்த பிறகு தீபா தன்னுடைய கையை காட்டுகிறாள். அப்போது கார்த்திக் தீபாவின் கையை பார்க்க அவளின் கையில் இருக்கும் மருதாணியை கவனித்து விடுகிறான்.
பல்லவி கையில் இருந்ததும் இதே மருதாணி தானே என்ற குழப்பம் கார்த்திக்கு எழுகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்துக் கொள்ளலாம்.
மேலும் படிக்க
IND Vs AUS 3rd T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா? ஆஸ்திரேலியா உடன் இன்று 3வது டி20 போட்டி
பாகிஸ்தான் கலைஞர்களுக்கு தடையா? இதுதான் உங்க தேச பக்தியா? - சரமாரியாக சாடிய உச்ச நீதிமன்றம்!