ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ராஜேஸ்வரியால் வெளியே வந்த ஆனந்த் வீட்டுக்கு வந்து சொத்தை பிடிக்க சொல்லி கேட்க, இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


அதாவது கார்த்திக் ஆனந்தை அமைதிப்படுத்த அபிராமி ஆனந்த் சொத்தை பிரிக்க சொல்லி கேட்டதால் மனம் உடைந்து போகிறார். இதனால் அவருக்கு கார்த்திக் ஆறுதல் கூறுகிறார். அதோட அபிராமி தூங்காமல் இருக்க அண்ணாமலை ஆறுதல் சொல்லி ஒரு சால்வையை போத்தி விட்டு தூங்க வைக்கிறார்.


மறுநாள் காலையில் வீடு முழுவதும் தேடியும் அபிராமியை காணாததால் எல்லாரும் பதற்றம் அடைகின்றனர். கார்த்திக் “அம்மாவோட போன் வீட்ல தான் இருக்கு ஏதாவது கோயிலுக்கு போய் இருப்பாங்க” என்று வீட்டில் இருப்பவர்களுக்கு ஆறுதல் சொல்கிறான். மேலும் அபிராமியைத் தேடி கோயில் கோயிலாக அலைகிறான். இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.


மேலும் படிக்க: The Goat Life: பெரியோனே ரஹ்மானே... தி கோட் லைஃப் பாடல் முழு ஆல்பம் ரிலீஸ்! ரஹ்மானுக்கு அடுத்த ஆஸ்கர் ரெடி!


Shruti Hassan: உங்களுக்கு கேக்க வேற கேள்வியே இல்லையா.. திருமணத்தைப் பற்றி கேட்டதும் முகம் மாறிய ஷ்ருதிஹாசன்