ரஹ்மானின் இசையில் அமைந்த இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளன.


ஆடு ஜீவிதம்


மலையாள இயக்குநர் ப்ளெஸ்ஸி இயக்கத்தில் ப்ரித்விராஜ் நடித்திருக்கும் படம் ஆடு ஜீவிதம். ஏ. ஆர் . ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் மார்ச்-28 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் இணையதளத்தில் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன. பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இப்படத்தில் ரஹ்மானின் பாடல்களும் பின்னணி இசையும் மிகப்பெரிய பலமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும் அவற்றைப் பாடியவர்கள் குறித்த தகவல்களையும் பார்க்கலாம்.


பெரியோனே என் ரஹ்மானே



சமீப காலத்தில் சமூக வலைதளத்தில் அதிகம் குறிப்பிடப்படும் ஒரு பாடலாக இப்பாடல் மாறியுள்ளது. மலையாளத்தில் இப்பாடலுக்கான பாடல் வரிகளை  ரஃபீக் அகமத் எழுதியுள்ளார். தமிழில் மஷூக் ரஹ்மான் இந்தப் பாடலுக்கான பாடல் வரிகளை எழுதியுள்ளார். ஜிதின் இந்தப் பாடலை தமிழ் மற்றும் மலையாளத்தில் பாடியுள்ளார். இந்தப் பாடலைக் கேட்ட ரசிகர்கள் பெரியோனே என் ரஹ்மானே, என்று ரஹ்மானை அழைத்து வருகிறார்கள்.


பத்திக்காத தீ



சினேகன் எழுதியுள்ள இந்தப் பாடல் ப்ரித்விராஜ் மற்றும் அமலா பாலுக்கு இடையிலான காதலை வெளிப்படுத்து பாடலாக அமைந்துள்ளது. சின்மயி, விஜய் யேசுதாஸ் மற்றும் ரக்‌ஷிதா சுரேஷ் இணைந்து இந்தப் பாடலை பாடியுள்ளார்கள்.


பெனெவலண்ட் ப்ரீஸ் (Benevolent Breeze)



முழுக்க முழுக்க புல்லாங்குழலில் அமைந்த இந்த பி.ஜி.எம் இல் ரஹ்மானின் முத்திரையைப் பார்க்கலாம். ஹைவே படத்தில் இடம்பெற்ற சூஹா சா பாடலை நினைவுபடுத்துகிறது இந்த இசை. 5 நிமிடம் நீளமுள்ள இந்த புல்லாங்குழல் இசையை நவின் சந்தர் இசைத்துள்ளார்.


படாவே (Badaweih)



பாலஸ்தீனிய நாட்டார் மற்றும் செவ்வியல் இசை ஆராய்ச்சியாளரும் பாடகருமான சானா மூஸ்ஸா இந்தப் பாலஸ்தீனிய நாட்டார் பாடலை பாடியுள்ளார்.


இஸ்திக்ஃபர் (Istigfar)



ஃபைஸ் முஸ்தஃபா மற்றும் ராஜா ஹசன் இருவரும் இணைந்து இந்தப் பாடலை பாடியுள்ளார்கள்.