இனிமேல் பாடல் வெளியீட்டில்  திருமணம் குறித்த கேள்வியால் கடுப்பாகியுள்ளார் ஷ்ருதி ஹாசன்


ஷ்ருதி ஹாசன்


 நடிகை ஷ்ருதி ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து நடித்துள்ள இனிமேல் பாடல் நேற்று மார்ச் 25 ஆம் தேதி வெளியானது. உலகநாயகன் கமல்ஹாசன் இந்தப் பாட்டிற்கான பாடல் வரிகளை எழுதியுள்ளார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இந்தப் பாடலை தயாரித்துள்ளது . ஷ்ருதிஹாசன் இந்தப் பாடலில் நடித்ததுடன் இயக்கவும் செய்திருக்கிறார். நேற்று சென்னையில் இந்த பாடல் வெளியிட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஷ்ருதிஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்டார்கள். 


தலைவர் 171


இந்த நிகழ்ச்சியில் லோகேஷ் கனகராஜ் தலைவர் 171 படம் குறித்தான தகவல்களை பறிமாறிக்கொண்டார். வரும் ஜூன் மாதம் முதல் இப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கி இந்த ஆண்டு இறுதிவரை நடைபெற இருப்பதாக அவர் தெரிவித்தார். மேலும் தலைவர் 171 படத்தின் படப்பிடிப்பு முடிந்த அடுத்த ஒரு மாத காலத்திற்குள்ளாக கைதி 2 படத்தின் படப்பிடிப்பையும் தொடங்க இருப்பதாக அவர் தெரிவித்தார்.


வேற கேள்வியே இல்லையா?


இந்த நிகழ்ச்சியில் நடிகை ஷ்ருதி ஹாசனிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வி ‘உங்களுக்கு எப்போ கல்யாணம்?’ என்பதுதான். பாடலை பாடி அதை இயக்கவும் செய்து அதுபற்றிய கேள்விகளை கேட்க ஆர்வமாக காத்திருந்த ஷ்ருதி ஹாசன் இந்த கேள்வியால் கோபத்திற்கு உச்சத்திற்கு சென்றதை அவரது முகத்தை பார்த்து நாம் தெரிந்துகொள்ளலாம் . ஆனால் நாகரிகம் கருதி அவர் தனது முகத்தில் சிரிப்பை வைத்துக்கொண்டு “ சீரியஸாவா..என்னுடைய முதல் கேள்வியே இதுதானா? என்னுடைய பாட்டைப் பற்றி கேட்பதற்கு வேறு எதுவும் இல்லையா? என் கல்யாணம் எப்போது என்று எனக்கு தெரியாது. நிஜமாக அதைப் பற்றி எனக்கு எந்த விதமான ஐடியாவும் இப்போதைக்கு இல்லை” என்று பதிலளித்துள்ளார்.


 






திருமணம் அச்சமூட்டுகிறது..


ஷ்ருதி ஹாசன் சாந்தனு ஹஸாரிகா என்பவரும் நீண்ட காலமாக காதலித்து வருகிறார்கள். கடந்த ஆண்டு இருவருக்கும் திருமணம் முடிந்துவிட்டதாக சமூக வலைதள பிரபலம் ஒருவர் வதந்தியை கிளப்பினார். இதனைத் தொடர்ந்து ஷ்ருதிஹாசன் தன் சார்பில் விளக்கமளித்தார். தனது வாழ்க்கையில் எந்த விதமான ஒளிவு மறைவும் இல்லாமல் வெளிப்படையாக பேசிவரும் தான் தனக்கு திருமணம் நடந்ததை ஏன் மறைக்க வேண்டும் . உண்மையில் தனது காதலனுடன் இருப்பதும், இருவரும் இணைந்து வேலை செய்வதும், மகிழ்ச்சியாக இருப்பதாக அவர் தெரிவித்தார். கல்யாணம் என்பதை நினைத்தாலே அது தன்னை அச்சமூட்டுவதாக அவர் தெரிவித்தார்.