Karnan Horse:‛‛போய் வா அலெக்ஸ்” - கர்ணன் குதிரைமறைவு: மாரி செல்வராஜ் உருக்கம்!

அலெக்ஸ் என அழைக்கப்படும் கர்ணன் பட குதிரை இறந்துவிட்ட தகவலை மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்

Continues below advertisement

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான கர்ணன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தனுஷ், லால், யோகி பாபு உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இத்திரைப்படத்தில் நடித்திருந்தபோதும், அப்படத்தில் வரும் கருப்பு குதிரை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. 

Continues below advertisement

இந்நிலையில், அலெக்ஸ் என அழைக்கப்படும் கர்ணன் பட குதிரை இறந்துவிட்ட தகவலை மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ”போய் வா அலெக்ஸ்” என அவர் குறிப்பிட்டுள்ளது ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குதிரையின் மறைவுக்கான காரணம் என்ன என்பது இன்னும் தெரியவில்லை. அது குறித்து விரிவான தகவல்கள் கிடைத்ததும் ஏபிபி தளத்தில் பகிர்வோம். 

முன்னதாக, பொன்னியின் செல்வன் படப்பிடிப்பின்போது குதிரை ஒன்று பலியானதைத் தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய விலங்குகள் நல வாரியம் The Animal Welfare Board of India (AWBI) விரிவான விசாரணை கோரியுள்ளது.

பீட்டா இந்தியா (PETA India) எனும் விலங்குகள் நல வாரியம் ஹைதராபத் காவல் நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி ஒரு புகார் அளித்தது. அந்தப் புகாரில், ஆகஸ்ட் 11 ஆம் தேதியன்று பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தளத்தில் குதிரை ஒன்று பலியானதாக புகார் கூறப்பட்டிருந்தது.

அந்த புகாரின் அடிப்படையில் மெட்ராஸ் டாக்கீஸ் மீதும் குதிரையின் உரிமையாளர் மீதும் விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் Prevention of Cruelty to Animals (PCA)வின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. படப்பிடிப்பு தளத்தில் இறந்த குதிரைக்கு அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டதாக அப்துல்லாபூர்மெட் காவல்நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பரிசோதனை முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. குதிரை படப்பிடிப்பு தளத்திலேயே புதைக்கப்பட்டது.

பீட்டா புகார் குறித்து தகவல்கள் வெளியான நிலையில், இது குறித்து விலங்குகள் நல வாரியம் ஹைதராபாத் ஆட்சியருக்கும், தெலுங்கானா மாநில விலங்குகள் நல வாரியத்துக்கும் முறையிட்டுள்ளது. அதில், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

பொன்னியின் செல்வன்(Ponniyin Selvan) திரைப்படத்தில் பல குதிரைகள் பயன்படுத்தப்படுவதாகவும். பல மணி நேரம் படப்பிடிப்பில் ஈடுபடுத்தப்படுவதால் அவை நீர்ச்சத்து குறைபாட்டுக்கு ஆளாவதாகவும் புகார் எழுந்துள்ளது.  இது குறித்து பீட்டா இந்தியாவின் தலைமை அலுவலர் குஷ்பூ குப்தா கூறுகையில், கணினி கிராஃபிக்ஸ் கைவந்த கலையாகிவிட்ட இந்த காலக்கட்டத்தில் குதிரைகளை மணிக்கணக்காக படப்பிடிப்பில் ஈடுபடுவதற்கு என்ன காரணம் கூறினாலும் அது ஏற்புடையதல்ல. முற்போக்கு சிந்தனை கொண்ட இயக்குநர்கள் இவ்வாறு செய்ய மாட்டார்கள். மணிரத்னம் இதை உணர்ந்து கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸுக்கு மாற வேண்டும் என்று கூறியுள்ளார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola