பெண் குழந்தைக்கு தாயான கியாரா அத்வானி

பிரபல பாலிவுட் ஜோடியான கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்ஹோத்ராவுக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. கியாரா அத்வானி கருவுற்றிருக்கும் தகவலை கடந்த பிப்ரவரி மாதம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தார். தற்போது இந்த ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பையில் ரிலையன்ஸ் மருத்துவமனையில் சுக பிரசவ முறையில் குழந்தை பிறந்ததாகவும் குழந்தையும் தாயும் நலமுடன் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை கியாரா மற்றும் சித்தார்த் தரப்பில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்

கியாரா மற்றும் சித்தார் இருவரும் ஷேர்ஷா படத்தில் இணைந்து நடித்தபோது காதல் வயப்பட்டார்கள். இருவரும் தங்கள் காதலை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு இந்த ஜோடிக்கு ஜெய்சால்மரில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமண வீடியோ ரசிகர்களால் பரவலாக பேசப்பட்டது

கியாரா அத்வானி தற்போது இந்தியில் வார் 2 திரைப்படத்தில் நடித்துள்ளார். வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது . மறுபக்கம் சித்தார்த் மல்ஹோத்ரா ஜான்வி கபூர் இணைந்து நடித்துள்ள பரம சுந்தரி திரைப்படம் வரும் ஜூலை 25 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.