தமிழ் சினிமாவில் 1960களில் அறிமுகமான இசையமைப்பாளர்களில் ஒருவர் சங்கர் கணேஷ். இவர் தன்னுடைய ஆரம்ப காலத்தில் விஸ்வநாதன் மற்றும் ராமமூர்த்தியிடம் உதவி இசை கலைஞராக இருந்து வந்தார். அதன்பின்னர் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த மகராசி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக உருவெடுத்தார். தமிழ்,மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளில் திரைப்பட இசையை அமைத்துள்ளார். இவருடைய இசையில் அமைந்த சிறப்பான பாடல்கள் என்னென்ன?


1. மாசி மாசம் தான்:


ரஜினிகாந்த் மற்றும் ராதிகா நடிப்பில் வெளியான ஊர்க்காவலன் திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடலை எஸ்பி பாலசுப்ரமணியம் மற்றும் சித்ரா ஆகியோ பாடியிருப்பார்கள். 


"பட்டு சேலை ரவிக்கை
ஜொலி ஜொலிக்க பக்கம் மாமன்
இருக்க தாலி முடிக்க வந்து
வாழ்த்து சொல்லணும்
ஊரு சனம்..."


 



2. மூங்கில் இலை காடுகளில்:


பிரதாப் போத்தன் மற்றும் சீதா நடிப்பில் வெளியான பெண்மணி அவ கண்மணி திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்று இருக்கும். இப்பாடலை எஸ்பி பால்சுப்ரமணியம் சங்கர் கணேஷ் இசையில் பாடியிருப்பார். 


"மாம்பூக்களே மைனாக்களே 
சந்தோஷ வேளைதான் சங்கீதம் பாடுங்கள் 
நாணல்களே நாரைகளே 
கல்யாணப் பெண் இவள் நல் வாழ்த்துப்பாடுங்கள் 
கால காலமாய் தப்பாத தாளமாய் 
காதல் வண்ணமே மங்காத வேளையாய் 
பெண் என்ற காவியம் பல்லாண்டு வாழணும்..."


 



3. எனக்கு நீ உனக்கு நான்:


சத்யராஜ், கௌதமி நடிப்பில் வெளியான எனக்கு நீ உனக்கு நான் திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடலையும் சங்கர் கணேஷ் இசையில் எஸ்பிபி பாடியிருப்பார். 


"நாளான பின் தெரியும் தெரியும்
நான் யாரென புரியும் புரியும்
நீர் மேகங்கள் விலகும் விலகும்
நெடு வானமும் விளங்கும் விளங்கும்

சில நேரம் தென்றல் கூட
புயல் போல தோன்றலாம்
பாலும் கள்ளாகும் சிறு பூவும் முள்ளாகும்
பிழை பார்த்திடும் பார்வையா..."


 



4.பொன் வீணையே என்னோடு வா:


காகித ஓடம் திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடலும் சங்கர் கணேஷ் எஸ்பிபி கூட்டணியில் அமைந்த சிறப்பான பாடல்களில் ஒன்று. 


"புன்னகை என்பது புத்தகமானது
எத்தனை பாடங்கள்
அத்தனை பாடமும் கற்று முடிப்பது
எத்தனை மாதங்கள்
அழகிய பொன் வீணையே என்னோடு வா
என் பாடல் நீ பாடவா.."


 



5. பொன் ஓவியம் ஒன்று:


பாக்கியரஜ்,ராதிகா நடிப்பில் வெளியான குமரி பெண்ணி உள்ளத்திலே திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடலிலும் சங்கர் கணேஷின் இசை சிறப்பாக அமைந்திருக்கும். 


"அணைக்கையில் மணக்கின்ற
அமுதெனும் உன் மேனி
அழகினை கண்களால் அளந்திடவா
இதழ்களில் இதழ் கொண்டு இனிய கதை ஒன்று
இதழ்களில் இதழ் கொண்டு இனிய கதை ஒன்று
எழுதிட சம்மதம் தருவாயா.. தருவாயா.."


 



இவ்வாறு பல நல்ல பாடல்களை அவர் தமிழ் சினிமாவிற்கு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: எருமையை பலி கொடுத்து கிச்சா சுதீப் பிறந்த நாள் கொண்டாட்டம்: 25 பேர் மீது வழக்குப் பதிவு!