கூலி


ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்து வருகிறார். ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து ரஜினியின் இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். கடந்த ஜூன் இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் துவங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து படத்தில் பல நடிகர்கள் இணைந்து வருகிறார்கள்


கூலி படத்தில் இணையும் கன்னட நடிகர்


கூலி திரைப்படத்தில் நடிகர் சத்யராஜ் மற்றும் நடிகை ஷ்ருதி ஹாஸன் நடிக்க இருப்பதாக முன்னதாக தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து இப்படத்தில் மலையாள நடிகர் செளபின் ஷாஹிர் , மற்றும் தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா இப்படத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின. 






தற்போது கூலி படத்தில் பிரபல கன்னட நடிகர் உபேந்திரா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியகியுள்ளன. நடிகர், இயக்குநர் , பின்னணி பாடகர் , அரசியல்வாதி என பன்முகத்தன்மைக் கொண்ட நடிகர் உபேந்திரா.  தமிழில் உபேந்திரா விஷால் நடித்த சத்யம் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத் தக்கது. சத்யம் திரைப்படம் பெரும் வரவேற்புக்கு மத்தியில் வெளியாகி தோல்வியை தழுவியது. இதனை அடுத்து தமிழில் அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. தற்போது கிட்டதட்ட 16 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் அவர் மீண்டு நடிக்கவிருப்பது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 


வேட்டையன் 


ரஜினியின் வேட்டையன் படத்தை இயக்குநர் த.செ ஞானவேல் இயக்கியுள்ளார். அமிதாப் பச்சன் , ஃபகத் ஃபாசில் , துஷாரா விஜயன் , மஞ்சு வாரியர் , ரித்திகா சிங்  உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வரும் அக்டோபர் 10 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. வேட்டையன் படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது. 




மேலும் படிக்க : Kottukkaali - Vaazhai : மாரி செல்வராஜின் வாழை.. சூரியின் கொட்டுக்காளி.. முதல் நாள் வசூல் தெரியுமா?


The Goat : சென்ஸார் சான்றிதழ் பெற்றது விஜயின் தி கோட்...படம் எவ்வளவு நேரம் தெரியுமா?