மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகர் காந்திஜி சாலையில் ஏ. எஸ்.அப்துல் மாலிக் என்பவருக்கு சொந்தமான இடத்தில் புதிதாக கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.அந்த கட்டிட வேலையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 11 பேர் அங்கேயே தங்கியிருந்து கட்டுமான பணி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று கட்டுமான பணிவு முடிவடைந்து அனைவரும் சாப்பிட்டுவிட்டு உறங்க சென்ற நிலையில், மேற்குவங்கம் காஜல் மாட்டா பகுதியை சேர்ந்த 48 வயதான மித்து என்பவர் செல்போனில் பேசிக்கொண்டு முதல் தளம் சென்றதாக கூறப்படுகிறது.
Samyuktha - Vishnukanth: 15 நாள்களில் முடிந்த திருமண வாழ்க்கை... சீரியல் ஜோடி சம்யுக்தா- விஷ்ணுகாந்த் பிரிந்தது ஏன்? புதிய தகவல்கள்..!
இந்த சூழலில் நேற்று காலை கட்டுமான தொழிலாளிகள் தூங்கி எழுந்து பார்த்தபோது மித்து லிப்ட் பகுதியில் இறந்து கிடந்துள்ளார். அருகிலேயே செல்ஃபோன் கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்தவர்கள் இச்சம்பம் குறித்து மயிலாடுதுறை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலை அடுத்து சம்பவம் இடத்திற்கு விரைந்த மயிலாடுதுறை காவல்துறையினர் இறந்து கிடந்த மித்துவின் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Selvaragavan: நான் கேட்ட மிகச் சிறந்த கதைகளில் ஒன்று 'ஃபர்ஹானா'... செல்வராகவன் நெகிழ்ச்சி ட்வீட்!
மேலும், இச்சம்பவம் தொடர்பாக தொழிலாளிகளிடம் நடத்திய விசாரணையில் முதல் தளத்திலிருந்து தவறி கீழே விழுந்து இறந்திருக்கலாம் என்று கூறியதன் பெயரில் காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வடமாநில தொழிலாளர் கட்டிடத்தில் சந்தேகத்துக்கு உரிய முறையில் இறந்து கிடந்த சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண:
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற