குளிர்காலத்தில் சரும பராமரிப்பிற்கு சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.குளிர்காலத்தில் சருமம் வறண்டுவிடும். தோல் எரிச்சல், அரிப்பு உள்ளிட்டவை ஏற்படும் வாய்ப்பு அதிகம் உண்டு. சின்ன பூச்சிகள் உள்ளிட்டவற்றினல் ஏற்படும் அரிப்பு உள்ளிட்டவற்றிற்கு வீட்டில் உள்ள பொருட்களை வைத்த எப்படி சரி செய்வது என்று காணலாம். 


தோலில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் தீவிரத்தை பொறுத்தே அதற்கான சிகிச்சை முறைகளை தேர்வு செய்ய வேண்டும். பாதிப்பு தீவிரமாக இருந்தாலோ, கற்றாழை, ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தியும் பயனில்லை என்றால் நிச்சயம் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். 


ஆலிவ் எண்ணெய்


தோலில் ஏற்படும் வறட்சி, அரிப்பு, எரிச்சல் உள்ளிட்டவற்றுக்கு பாதிக்கப்பட்ட இடத்தில் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தி மசாஜ் செய்வது நல்ல பலம் தரும். ஆலிவ் எண்ணெய் சருமத்தை ஈரப்பத்துடன் வைத்துக்கொள்ளும். அதோடு, சரும எரிச்சலை தடுக்கும். பாக்டீரியா பரவுவதைத் தடுக்கும்.


ஆலிவ் எண்ணெயை மிதமாக சூடு செய்ய வேண்டும்.


பின்னர், சருமம் பாதிக்கப்பட்ட இடங்களில் பஞ்சு பயன்படுத்தி தடவலாம். ஒரு நாளை இரண்டு வேளை பயன்படுத்து நல்ல பலன் கொடுக்கும். 


சரும வறட்சி உள்ள பகுதிகளில் மட்டும் பயன்படுத்த வேண்டும். சருமம் பிளவு ஏற்பட்ட இடங்களில் பயன்படுத்த கூடாது.


Rue


Rue - மருத்துவ குணம் உள்ள தாவரம். இது பல்வேறு சரும பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக இருக்கும். சரும எரிச்சலுக்கு உடனடி தீர்வு அளிக்கக் கூடியது. 


Rue இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து சாறு இறங்கியவுடன் ஆற விடவும்,. பிறகு, பஞ்சு அல்லது சுத்தமான பருத்தி துணியை தண்ணீரில் முக்கி, பிழிந்தெடுத்து அந்த துணியை பாதிக்கப்பட்ட இடத்தில் வைக்க வேண்டும்.


கெமோமைல் டீ குளியல்


கெமோமை பூ டீயில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. சரும பிரச்சனைகளுக்கு இது மிகவும் நல்லதாக இருக்கும். தூக்கம் வராமல் பிரச்சனை ஏற்படுவோருக்கு கெமோமைல் டீ நல்ல தீர்வு, மனதை இதமாக்கி ஆழ்ந்த தூக்கத்திற்கு வழி செய்யும். போலவே சருமத்தில் எரிச்சல் இருந்தால் கெமொமைல் டீ குளியல் நல்லது. 


நன்றாக கொதிக்கும் நீரில் கெமொமைல் டீ இலைகளை போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். இளம் கூடாக உள்ள தண்ணீரில் இதை கலந்து குளிக்கலாம். 


கிராம்பு எண்ணெய்


கிராம்பு எண்ணெய் ஆன்டி-செப்டிக் பண்புகளை கொண்டுள்ளது. இதனால் எரிச்சல் குறைய வாய்ப்பு இருக்கிறது. ஆன்டி - இன்ஃப்ளமேசன் என்னும் வீக்கத்துக்கு எதிரான பண்பு எரிச்சலையும் பாக்டீரியல் தொற்று பரவுவதை தடுக்கும்.


இரண்டு மூன்று சொட்டு கிராம்பு எண்ணெய் எடுத்து சருமத்தில் பாதிக்கப்பட்ட இடங்களில் தடவலாம்.


கற்றாழை 


கற்றாழையில் ஏராளமான மருத்துவ நன்மைகள் உள்ளது நாம் அறிந்ததே. சரும எரிச்சலை தடுக்க கற்றாழை ஜெல் சிறந்த தேர்வு.


கற்றாழை மடலை எடுத்து சுத்தம் செய்துவிட்டு அதனுள் இருக்கும் ஜெல்லை எடுத்து பாதிக்கப்பட்ட இடத்தில் இரண்டு வேளை தடவி வந்தால் எரிச்சல் காணாமல் போகும். மேலும், பாக்ட்ரீயாக்கள் வளர்வதை தடுக்கும். கற்றாழைக்கு குணமாக்கும் தன்மை அதிகம் உண்டு. அதனால், காயங்களை காணமல்போக செய்துவிடும்.