வெள்ளரிக்காய் அனைவரும் விரும்பி உண்ணும் ஒன்று. ஆரோக்கியமான ஒரு தினசரி ருட்டீனுக்கு நல்ல சாய்ஸ். வெள்ளிக்காய் சாதம் எப்படி செய்வது என பார்க்கலாம். 


தேவையான பொருட்கள்


வேக வைத்த சாதம் - 1 கப்


துருவிய வெள்ளரிக்காய் - ஒரு கப்


துருவிய தேங்காய் - ஒரு கப்


கொத்தமல்லி இழை - ஒரு கைப்பிடி


தாளிக்க..


முந்திரி - 6-7 +


வேர்க்கடலை - கால் கப்


காய்ந்த சிவப்பு மிளகாய் - 2


நெய் - 3 டேபிள் ஸ்பூன்


கடுகு - ஒரு ஸ்பூன்


சீரகம் - ஒரு ஸ்பூன்


உளுந்து - ஒரு ஸ்பூன்


கடலைப் பருப்பு - இரு ஸ்பூன்


கருவேப்பிலை - 1


உப்பு - தேவையான அளவு


செய்முறை


அடுப்பில் மிதமான தீயில் கடாய் வைத்து, அது சூடானவுடன் நெய் ஊற்ற வேண்டும்.  அதில் கடுகு, சீரகம், கருவேப்பிலை சேர்க்கவும். கடுக, சீரகம் வெடித்ததும், காய்ந்த மிளகாய், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து வதக்கவும். அதோடு, முந்திரி, வேர்க்கடலை சேர்த்து வதக்கவும்.


இதோடு, துருவிய தேங்காய், வெள்ளரிக்காய், உப்பு சேர்த்து வதக்கவும். இதோடு வேக வைத்த சாதத்தை கலந்து வதக்கவும். கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான வெள்ளரிக்காய் சாதம் ரெடி.


இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் கே, மாங்கனீசு, காப்பர், காப்பர் மற்றும் பொட்டாசியம் போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க வெள்ளரிக்காய் உதவுகிறது.  உடலை நச்சுத்தன்மையிலிருந்து பாதுகாக்கவும், கண் ஆரோக்கியத்தை பராமரிக்கவும், இரத்தத்தை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பல நன்மைகளுக்கு உடலுக்கு கொடுக்க கூடியது வெள்ளரிக்காய். 


தொப்பையை குறைக்க பல்வேறு வழிமுறைகளை முயற்சித்தவர்கள், தொப்பை குறைய தினமும் வெள்ளரிக்காய் சேர்ந்த நீர் குடிப்பதன் மூலம் பலன் பெறலாம் என பரிந்துரைக்கப்படுகிறது. மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு வெள்ளரிக்காய் ஒரு நல்ல நிவாரணி. வெள்ளரிக்காயில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது.


வெள்ளரிக்காயில் மெக்னீசியம், நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன. இது இரத்த அழுத்த அளவை பராமரிக்கிறது. 


முகம், கண்கள் மற்றும் கழுத்துப்பகுதியில் வெள்ளரிக்காய் மசித்த விழுதை தடவி 15 முதல் 20 நிமிடங்கள் வரை விட்டு குளிர்ந்த நீரில் கழுவி எடுத்தால் சருமத்துக்கு சிறந்த டானிக் கிடைக்கும்.


வெள்ளரிக்காயை வழக்கமாக சருமத்துக்கு பயன்படுத்தும்போது முகப்பருக்கள், கருப்புப்புள்ளிகள் எனப்படும் ப்ளாக்ஹெட்ஸுகள், மற்றும் சருமத்தில் சுருக்கங்களை தடுக்கிறது.