Leo Trailer: தயார் நிலையில் நிற்கும் விஜய்... லியோ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் நேரம் இதுதான்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ படத்தின் மிரள வைக்கும் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது மக்களே!

லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கி விஜய், த்ரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜூன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கெளதம் வாசுதேவ் மேனன், சான்டி மாஸ்டர், மிஸ்கின், அனுராக் கஷ்யப் என மிகப்பெரிய நடிகர் பட்டாளம் இணைந்து நடித்திருக்கும் திரைப்படமாக உருவாகி இருக்கிறது லியோ திரைப்படம்.
அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கும் நிலையில் 7 ஸ்கிரீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி லியோ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
Just In




இந்நிலையில் லியோ திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று அக்டோபர் 5 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முன்னதாக படத்தில் நடிகை த்ரிஷாவின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது படக்குழு. தற்போது இந்த ட்ரெய்லர் இன்று மாலை 6: 30 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் விஜய் கூட்டணி
மாஸ்டர் திரைப்படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணி இணைந்துள்ளது. தமிழ் சினிமாவில் சமகாலத்தில் மிகப்பெரிய ட்ரெண்ட் செட்டர் இயக்குநராக உருவாகி இருக்கும் லோகெஷ் கனகராஜ் லியோ திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமாவில் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக மாறுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
படப்பிடிப்பு
கடந்த ஆண்டு லியோ படத்தின் அறிவிப்பு வெளியாகி இந்த ஆண்டு ஜனவரி மாதம் லியோ திரைப்படத்திற்கான படபிடிப்பு வேலைகள் தொடங்கின. கிட்டதட்ட ஆறுமாதம் காலத்தில் மொத்தம் 125 நாட்கள் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.
லியோ இதுவரை..
இதனிடையே நடிகர் விஜய்யின் பிறந்தநாளை ஒட்டி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் நான் ரெடிதான் பாடலை படக்குழு வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து நடிகர் அர்ஜூன் மற்றும் சஞ்சய் தத் நடித்துள்ள அந்தோனி தாஸ் மற்றும் ஹரோல்டு தாஸின் கதாபாத்திரங்கள் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டது.
ஆடியோ லாஞ்ச்
ரசிகர்கள் மிக ஆர்வமாக காத்திருந்த லியோ படத்தின் இசைவெளியீட்டு நிகழ்ச்சி பாதுகாப்பு காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டது. இதனால் ரசிகர்கள் சோகமடைந்தனர். தற்போது படம் வெளியாக இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கும் நிலையில் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இதனைத் தொடர்ந்து இனி வரும் நாட்களில் படம் குறித்த அடுத்தடுத்த ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு ஈடுபட இருக்கிறது.