GVM vs Lokesh : கமலின் தீவிர ரசிகர் குறித்து நெட்டிசன் ஒருவர் ட்விட் செய்திருந்த நிலையில், அதற்கு இயக்குநர் லோக்கேஷ் கனகராஜூம், கவுதம் வாசுதேவ் மேனனும் பதிலளித்துள்ளது தற்போது வைரலாகி வருகிறது. 


வேட்டையாடு விளையாடு ரீ ரிலீஸ்


கமல், கவுதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் உருவான வேட்டையாடு விளையாடு திரைப்படம் 2006ல் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. கமலுடன்,  ஜோதிகா, கமாலினி முகர்ஜி, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி உட்பட பலர் நடிப்பில் வெளியான இந்த படத்தை மாணிக்கம் நாராயணன் தயாரித்திருந்தார். ரசிகற்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றதால், வேட்டையாடு விளையாடு படத்தை, டிஜிட்டலில் மெருகூட்டப்பட்டு மீண்டும் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டது.


மெருக்கூட்டப்பட்ட இந்த படம் ஜூனில் மீண்டும் ரிலீசாகும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் ரிலீசாகி இருக்கும் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தின் போஸ்டரை டிவிட்டரில் பகிர்ந்த ரசிகர் ஒருவர் சொன்ன கருத்து வைரலாகி வருகிறது.


சண்டையில சட்டை கிழியாது


இந்நிலையில், ரசிகர் ஒருவர், ”எனக்கென்னமோ யார் ஆண்டவரின் பெஸ்ட் பேஃன் இயக்குநர் என்ற சண்டையில் முதலிடத்தை பிடித்தது கௌதம் வாசுதேவ் மேனன் தான் என்று தோன்றுகிறது. இதனை சொல்வதற்கு என்னை மன்னிக்கவும் லோகேஷ் கனகராஜ்" என்று குறிப்பிட்டிருந்தார்.






அவருக்கு  பதிலளித்த லோகேஷ் கனகராஜ், டவுட்டே வேண்டாம் ப்ரோ, கௌதம் மேனன் தான் என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். அதன்படி, "நாயகன் மீண்டும் வரான் வரைக்கும் தான். நான் அதைவிட பெரிதாக பண்ண முயற்சிக்கணும். இது ஒரு நல்ல சேலஞ்ச். ஆனா இந்த சண்டையில சட்டை கிழியாது. அன்பு மட்டுமே" என குறிப்பிட்டிருந்தார். 


இப்படி ரசிகர்கள் ஒரு பக்கம் யாரு பெஸ்ட் டைரக்டர் என சண்டைக்கு மல்லுக்கட்ட, லோகேஷும், கவுதம் வாசுதேவ் மேனனும் டிவிட்டரில் போடும் அன்பு சண்டை மேலும் வைரலாகி உள்ளது.




மேலும் படிக்க


Neeya Naana : கோபிநாத் கேட்ட கேள்வி...அரங்கத்தையே ஒரு நிமிடத்தில் கண்கலங்க வைத்த நபர்...அப்படி என்ன சொன்னார்?


Hansika On Partner Movie: தியேட்டரில் வந்து பாருங்க ... என்னை வித்தியாசமா பார்ப்பீங்க.. பார்ட்னர் படம் குறித்து ஹன்சிகா