நீயா நானா







பிக் பாஸ், அது இது எது, ஸ்டார் மியூசிக் போன்ற ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போனது விஜய் தொலைக்காட்சி. அந்த நிகழ்ச்சிகளில் ஒன்றுதான “நீயா நானா”. சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளை, சாதாரண மனிதர்களை இரண்டு குழுக்களாக பிரித்து, இரு தரப்பினரின் கருத்துகளையும் கேட்டு, ஆராயும் நிகழ்ச்சிதான் நீயா நானா. 


வாரந்தோறும் ஞாயிற்றுகிழமை நண்பகல் 12 மணிக்கு ஒளிபரப்பப்பராகும் இந்த ஷோவை கோபிநாத் தான் தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த 2006-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் இதுவரை பலதரப்பட்ட தலைப்புகள் குறித்து பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த வாரம் இளையராஜா ரசிர்களுள் சீனியர் மற்றும் ஜூனியர்களுக்கிடைய விவாதம் நடைபெற்றது.


அரகத்தையே கண்கலங்க வைத்த நபர்


பொதுவாக இளையராஜா பாடல் தான் யாருக்கு தான் பிடிக்கமா இருக்கும்.  குறிப்பாக அந்த காலத்தில் மக்களின் உணர்வோடு உயிராய் இருந்தது. அதனை இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு ரசிர்களும் உணர்வுபூர்வமான வார்த்தைகளால் விவரித்து இருக்கின்றனர்.


இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பலர் தங்களுடைய இழப்பு மற்றும் தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்விகளை மறந்து, அடுத்து கட்டத்திற்கு எடுத்த செல்ல இளையராஜா பாடல்கள் தான் உதவியாக இருந்தது என்று கூறினர். மற்றொரு நபர் தன்னுடைய வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்துள்ளார். 


அதாவது, தனக்கு ஆரம்பத்தில் சின்ன ஒளி போன்று தான் கண் தெரிந்தது. நாளடைவில் சுத்தமாக அதுவும் தெரியவில்லை. அந்த வெளிச்சத்தை மீட்டெடுக்க முயற்சி செய்து பார்க்கலாமே என்று நினைத்து மருத்துவர்களை அனுகினேன். அப்பொழுது என்னுடைய கண்ணை எடுத்து வேறு யாருக்கு வைத்தாலும் அந்த நபருக்கு கண் தெரியும். ஆனால் வேறு யாருடைய கண்ணை எடுத்து எனக்கு வைத்தாலும் எனக்கு கண் தெரியாது என்று மருத்துவர்கள் கூறினர். இந்த விஷியத்தை கடந்த வர இளையராஜா பாடல் உதவியாக இருந்தது.


 'வாழ்க்கை’ படத்தில் இளையராஜா பாடிய ’மனமே நீ துடிக்காதே...விழியே நீ நனையாதே’ என்ற பாடல் தான் தன்னை கவலையடைய செய்யாமல், உற்சாகமாக வாழ முக்கிய காரணமாக இருந்தது என்று கூறினார். மேலும், இளையராஜா குரலிலேயே பாடலையும் பாடி காட்டி நிகழ்ச்சியின் போட்டியாளர்களை கண்ணீரில் நெகிழ வைத்திருக்கிறார். பார்வையற்ற நபர் தனது சோகத்தினை வெளிப்படுத்தி பாடல் ஒன்றினைப் பாடியதை கேட்ட கோபிநாத் கண்கலங்கியதோடு, அரங்கமே கண்ணீரில் மூழ்கியது.


மேலும், ”எல்லா பிரச்சனைகளும் வந்துவிட்டு போகலாம். ஆனால் வாழ்க்கையை வாழலாம் இல்லையா ” என முதுகை தட்டிக் கொடுத்தது போல உணர்ந்ததாக அவர் கூறியபோது அரங்கம் கைத்தட்டல்களால் நிறைந்திருந்தது.


ராக் ஸ்டார் இளையராஜா


இதனை அடுத்து, ராக் ஸ்டார் இளையராஜா பாடல்கள் குறித்து கோபிநாத் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஒரு நபர் அரங்கத்தை இளையராஜா வைப்புக்கு தள்ளி உள்ளார்.  'சகலகலா வல்லவன்’ படத்தில் ’இளமை இதே இதோ’...பாடலை ஒரு நபர் பாடி அரங்கத்தை குஷிப்படுத்தியுள்ளார். 


அதேபோன்று, மற்றொரு பெண், நாதஸ்வரம் வாசித்து இளையராஜா பாடலின் இசையை வாசித்துள்ளார். இந்த பெண் இசைக்க  'மண்வாசனை' படத்தின் 'பொத்தி வச்ச மல்லிகை மொட்டு' பாடலை அனைவரும் பாடி அரங்கத்தையே இளையராஜா வைப்புக்கு கொண்டு சென்றனர்.  இந்த வீடியோக்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.