இந்தியன் 2


ஷங்கர் இயக்கி கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 ஜூலை 12 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சித்தார்த் , பிரியா பவானி சங்கர் , காஜல் அகர்வால் , பாபி சிம்ஹா , எஸ்.ஜே.சூர்யா , உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள் . இவர்கள் தவிர்த்து மறைந்த நடிகர்கள் விவேக் , மனோபாலா , மாரிமுத்து உள்ளிட்டவர்களும் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இந்தியன் 2 படத்தின் டிரைலர் இன்று வெளியாகியது.


சென்னையில் நடைபெற்ற ட்ரெயிலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ஷங்கர், இந்தியன் 2 படத்தின் இசையமைப்பாளர் அனிருத் , தயாரிப்பாளர் சுபாஸ்கரன், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், நடிகர்கள் சித்தார்த் , ஜெகன் , பாபி சிம்ஹா , விவேக் , ரகுல் ப்ரீத் சிங் , காஜல் அகர்வால் , உள்ளிட்ட அனைத்து நடிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். ஷங்கர்  நடிகர் கமல்ஹாசன் பற்றிய பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை தெரிவித்துள்ளார்.


 நான்கு நாட்கள் கயிற்றில் தொங்கிய கமல்ஹாசன் 






ஒரு காட்சிக்காக மொத்தம் நான்கு நாட்கள் கமல் கயிற்றில் தொங்கியபடியே நடித்தார். காலையில் வந்து மாலை பேக் அப் சொல்லும் வரை கயிற்றில் தான் தொங்கனும் . மேக் அப் , பஞ்சாபி மொழியில் பேசனும் , நடிக்கனும் , ஸ்லோ மோஷனில் எடுக்கும் காட்சி என்பதால் அதற்கு ஏற்றபடி வசனம் பேசிக் கொண்டே ஒரு ஓவியத்தையும் வரைய வேண்டும். இதை கமல் தவிர வேறு யாராலும் செய்திட முடியாது.


கமலுக்கு என்ன சவால் கொடுத்தாலும் அதை அவரால் பண்ண முடிகிறது. அவர் வரும் ஒவ்வொரு காட்சியிலுமே ஒரு ரசிகனாக எனக்கு ஒரு பிரமிப்பு ஏற்பட்டது. கமலை இன்னும் கொஞ்ச நேரம் திரையில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவேன். “ என்று ஷங்கர் தெரிவித்துள்ளார்.


 




மேலும் படிக்க : Thalapathy Vijay: தீயாய் பரவும் திரிஷா பற்றிய வதந்தி.. மௌனம் காக்கும் விஜய்.. இதுதான் காரணமா?


Siragadikka Aasai: மீனாவை அவமானப்படுத்தும் விஜயா.. அடுத்த பிளானோடு வீட்டுக்கு வந்த ஸ்ருதி அம்மா - சிறகடிக்க ஆசை இன்று!