ரீரிலீஸ் கலாச்சாரம்


பல வருடங்களுக்கு முன்பு வெளியாகிய படங்கள் இன்று புதிய சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன. இந்தப் படங்களை திரையரங்கில் அவர்கள் பார்க்கும் வகையில் ரீரிலீஸ் செய்யப்படுகின்றன. கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விருமாண்டி , நாயகன், ஆளவந்தான், தேவர் மகன், வேட்டையாடு விளையாடு, சிம்பு நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா, தனுஷ் நடித்த மயக்கம் என்ன, 3 உள்ளிட்ட படங்கள் சமீபத்தில்  திரையரங்குகளில் வெளியாகி இன்றைய தலைமுறை ரசிகர்கர்களால் கொண்டாடப்படுகின்றன.


மேலும் இந்தப் படங்களைப் பார்க்க திரையரங்குகளுக்கு கூட்டம் குவிந்து நல்ல வசூலும் கிடைக்கிறது.  இந்த மாதிரியான படங்களைத் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது சென்னை கமலா திரையரங்கம். தற்போது கமலா திரையரங்கம் ரஜினி, விஜய் மற்றும் விக்ரம் உள்ளிட்ட நடிகர்களின் வெற்றிப் படங்களை ரீரிலீஸ் செய்ய இருக்கிறது. இந்தப் படங்களை டிஜிட்டலாக இல்லாமல் பிரிண்ட் வடிவில் திரையிடுவதாக கமலா திரையரங்கம் தெரிவித்துள்ளது.






அண்ணாமலை


1992ஆம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான படம் அண்ணாமலை. சரத்பாபு, குஷ்பு, ஜனகராஜ், ராதா ரவி, மனோரமா உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்திருந்தார்கள். தேவா இப்படத்திற்கு இசையமைத்தார். இப்படத்தில்  ரஜினியின் டைட்டில் கார்டில் வரும் பி.ஜி.எம் இன்று வரை  அவரது படங்களில் பயன்படுத்தப்படுகிறது. வரும் பிப்ரவரி 22ஆம் தேதி இப்படம் கமலா திரையரங்கில் வெளியாகிறது. தொடர்ந்து ரஜினி நடித்த மன்னன் படமும் வெளியாக இருக்கிறது.


இப்படங்கள் தவிர்த்து விஜய்  நடித்த காதலுக்கு மரியாதை மற்றும் அஜித் குமார் நடித்த வாலி படமும் வரும் 23ஆம் தேதி வெளியாக இருக்கின்றன.


திருமலை


விஜய் , ஜோதிகா நடித்து கடந்த  2003ஆம் ஆண்டு வெளியான படம் திருமலை. ரமணா இப்படத்தை இயக்கினார். ரொமான்ஸ் , ஆக்‌ஷன் கலந்த படமான திருமலை, அதே பிப்ரவரி 22ஆம் தேதி கமலா திரையரங்கில் வெளியாகிறது.


 சாமி


ஹரி இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்து கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான சாமி படம் வரும் பிப்ரவரி 29 ஆம் தேதி வெளியாகிறது. 




மேலும் படிக்க : Siragadikka Aasai: சிட்டி வைத்த ட்விஸ்ட்.. காரை விற்ற முத்து - சிறகடிக்க ஆசை சீரியலின் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ!


புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு விமானப் பயணம்: குக் வித் கோமாளி மேடையில் சொன்னதை செய்த மைம் கோபி