பராசக்தி படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்க இருப்பது உறுதியாகியுள்ளது. இப்படத்தின் மூலம் முதன் முறையாக பிரபல இசையமைப்பாளருடன் வெங்கட் பிரபு பணியாற்ற இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தனது தம்பியை விட்டு வேறு ஒரு இசையமைப்பாளரா என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

Continues below advertisement

பராசக்தி படப்பிடிப்பு தொடக்கம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றாலும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இப்படத்தை ரசிகர்களின் ரசனையை வெல்வாரா என்பதே எதிர்பார்ப்பாக இருக்கிறது. மேலும், 80களில் நடப்பது போன்று கதைக்களத்தை அமைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்திலும் நடித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியிருக்கிறது. பொள்ளாச்சியில் படப்பிடிப்பு நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Continues below advertisement

இயக்குநர் வெங்கட் பிரபு - சிவா கூட்டணி

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் கடந்தாண்டு வெளியான கோட் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும், வசூலில் பட்டையை கிளப்பியது. இப்படத்தில் சிவகார்த்திகேயனும் கேமியோ ரோலில் நடித்திருந்தார். இந்நிலையில், வெங்கட் பிரபு அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் புதிய படத்தை இயக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இப்படம் டைம் டிராவல் கதையாக இருக்கும் என கூறப்படுகிறது. வெங்கட் பிரபு பாணியிலேயே நகைச்சுவையான கதைக்களமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் இல்லையாம். 

அனிருத் - வெங்கட் பிரபு காம்போ

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். வெங்கட் பிரபு இயக்கிய பெரும்பாலான படங்களுக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் மூலம் இந்த வெற்றி கூட்டணி உடைந்துள்ளது. மேலும், சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல், காக்கி சட்டை, மான் கராத்தே போன்ற படங்களுக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். அவர் இசையமைத்த படங்கள் அனைத்துமே சிவகார்த்திகேயனுக்கு வெற்றிப்படமாக இருந்திருக்கிறது. அந்த வரிசையில் இப்படமும் வெற்றி பெறும் என சிவகார்த்திகேயனின் விருப்பமாக இருக்கிறதாம். அதனால், தான் இந்த மாற்றமாம். முதன் முறையாக வெங்கட் பிரபு - அனிருத் கூட்டணியில் டைம் டிராவல் படத்தை பார்க்க அற்புதம் என்றாலும், யுவன் மிஸ்ஸிங் என ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.

யுவன் மிஸ்ஸிங்

90ஸ் கிட்ஸ்களை காதலிக்க வைத்த யுவன் 2கே கிட்ஸ்களிடம் தடுமாறுகிறாரா என்ற விமர்சனமும் எழுந்திருக்கிறது. சமீபகாலமாக அவரது இசையில் வெளியான படங்கள் எதுவும் பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை. அவரது இசையிலும் மந்தம் இருப்பதாகவே ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். யுவன் ரொம்ப அவுட்டேட் ஆகிவிட்டதாகவும் விமர்சிக்க தொடங்கிவிட்டனர். பழைய யுவன் மீண்டும் வருவார் என்ற நம்பிக்கையில் அவரது ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.