கும்பமேளாவில் பிரபலம் அடைந்த கண்ணழகி மோனலிசாவை காண மத்திய பிரதேசத்தில் கூட்டம் குவிந்ததால் மக்கள் திக்குமுக்காடி போனார்கள். ஒரு நடிகையை காண குவியும் கூட்டம் போன்று மோனலிசாவை காண மக்கள் குவிந்துள்ளனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. 

கும்பமேளா மோனலிசா

மத்திய பிரதேசம் இந்தூரை சேர்ந்த பெண் ஒருவர் கடந்தாண்டு தனது குடும்பத்தினருடன் கும்பமேளாவில் ருத்ராட்ச மாலை வியாபாரம் செய்து வந்தார். இவரது அழகிய தோற்றமும் வசீகரிக்கும் கண்களும் காண்போரை கவர்ந்தது. யூடியூபர் ஒருவர் இவரை வீடியோ எடுத்து பதிவேற்றம் செய்யவே சமூக வலைதளங்களில் பெரும் வைரலாக மாறினார் அந்த பெண். ஒரே நாளில் புகழின் உச்சிக்கு சென்றவர் தான் மோனலிசா. கும்பமேளாவில் பிரபலமானவரை மோனலிசா போஸ்லே என்றே நெட்டிசன்கள் பலரும் அழைக்க தொடங்கினர். 

மன வேதனை

மேலும், என்னை காண வருபவர்கள் யாரும் ருத்ராட்ச மாலை வாங்க வருவதில்லை என வேதனையடைந்தார். பின்னர் யூடியூபர் மற்றும் செய்தியாளர்களின் தொந்தரவு தாங்கமுடியாமல் கும்பமேளாவிலிருந்து தனது சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றுவிட்டார் மோனலிசா. அதன்பிறகு சமூக வலைதளங்களில் பிரபலமாக மாறிவிட்டார். யூடியூப் சேனல், இன்ஸ்டாகிராம் பக்கம் என இவருக்கு பெரும் ரசிகர் கூட்டம் உருவாகி விட்டது. இதனைத்தொடர்ந்து பாலிவுட் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா தனது புதிய படத்தில் மோனலிசாவை நடிக்க வைப்பதாக தெரிவித்தார்.  இதற்காக மோனலிசாவின் கிராமத்துக்கு சென்று அவரை சந்தித்து அதற்கான காசோலையையும் மோனலிசாவிடம் சனோஜ் வழங்கினார். 

இயக்குநர் கைது

இந்த அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே சனோஜ் துணை நடிகைக்கு பாலியல் தொந்தரவு அளித்தது தொடர்பாக கைது செய்யப்பட்டது அதிர்வலையை ஏற்படுத்தியது. கும்பமேளா மோனலிசாவின் கனவு தகர்ந்தது என்றும் செய்திகள் வெளியானது. இருப்பினும் அவர் சமூகவலைதளத்தில் வீடியோ வெளியிடுவதை நிறுத்தவில்லை. தற்போது, கும்பமேளா மோனலிசா ஒரு படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மத்திய பிரதேசத்தில் நடக்கிறது. சிவபுரி மாவட்டத்திற்கு வருகை தந்த மோனலிசாவை காண ரசிகர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. படப்பிடிப்பிற்காக வந்திருந்த மோனலிசா அங்கிருக்கிம் ரெஸ்ட் ஹவுசில் தங்கியுள்ளார். 

மோனலிசாவை காண குவிந்த கூட்டம்

அப்போது அவரை காண ரசிகர்கள் குவிந்தனர். போலீஸ் பாதுகாப்புடன் மோனலிசா நடந்து செல்கிறார். அப்போது ரசிகர் ஒருவர் அவரை பின்தொடர்ந்து தொலைபேசியில் வீடியோ எடுத்துள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஒரே நாளில் பிரபலமடைந்த மாேனலிசாவிற்கு இப்படியொரு வரவேற்பா என்றும் நெட்டிசன்கள் புலம்ப தொடங்கிவிட்டனர்.