ஜோஷி - ஜோஜூ ஜார்ஜ் மீண்டும் இணையும் ’ஆண்டனி’ படத்தின் பூஜை இன்று கொச்சி கிரவுன் பிளாசாவில் விமரிசையாக நடைபெற்றது.

Continues below advertisement


ஜோஷி இயக்கும் ஆண்டனி:


சுரேஷ் கோபி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன ’பாப்பன்’ படத்துக்கு பிறகு ஜோஷி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்திற்கு ஆண்டனி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் ஜோஷி இயக்கிய ’பொரிஞ்சு மரியம் ஜோஸ்’ படத்தில் முக்கிய வேடங்களில் நடித்த ஜோஜூ ஜார்ஜ், நைலா உஷா, செம்பன் வினோத் ஜோஸ், விஜயராகவன் ஆகிய நடிகர்களே  ‘ஆண்டனி’ படத்திலும் நடிக்கவுள்ளனர். இது இந்தப் படத்தின் இன்னொரு சிறப்பு. 


ரசிகர்கள் எதிர்பார்ப்பு:


இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் ஆஷா சரத் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜோஜூ ஜார்ஜ் - ஜோஷி கூட்டணியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் தான் ’பொரிஞ்சு மரியம் ஜோஸ்’. ’கட்டாளன் பொரிஞ்சு’ என்ற கதாபாத்திரத்திற்கு இன்றும் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில், மீண்டும் ஜோஷி மற்றும் ஜோஜூ ஜார்ஜ் ஜோடி எதிர்பார்ப்புகளை இரட்டிப்பாக்கியுள்ளது. ’இரட்டா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஜோஜூ மீண்டும் இந்தப் படத்தில் நடிக்கிறார்.


இப்படத்தை ஐன்ஸ்டீன் மீடியா நிறுவனம் சார்பில் ஐன்ஸ்டீன் சேக் பால் தயாரித்துள்ளார். படத்தின் தலைப்பு வெளியீட்டு விழா மற்றும் பூஜை விழா கொச்சி கிரவுன் பிளாசா ஹோட்டலில் நடைபெற்றது. இந்தப் படத்தின் கதையை ராஜேஷ் வர்மா எழுத, ரணதிவே ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பு ஷ்யாம் சசிதரன், இசை ஜேக்ஸ் பிஜோய்,  கலை இயக்கம் திலீப்நாத், ஆடை வடிவமைப்பு பிரவீன் வர்மா ஆகியோர் பணியாற்ற உள்ளனர்.


ஜோஜூ ஜார்ஜ்


கோலிவுட்டில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ’ஜகமே தந்திரம்’ படம் மூலம் அறிமுகமான ஜோஜூ ஜார்ஜ், ’பஃபூன்’ என்ற படத்திலும் நடித்திருந்தார்.


இந்நிலையில் முன்னதாக ஜோஜூ ஜார்ஜ், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் நடிகர் விஜய்யுடன் நடிப்பதாகத் தகவல் வெளியானது. மேலும் சென்னையில் நடைபெறும் படப்படிப்பில் ஜோஜூ ஜார்ஜ் கலந்து கொள்வார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வரும் நடிகர் ஜோஜூ ஜார்ஜூக்கு தமிழிலும் ரசிகர் பட்டாளம் உள்ள நிலையில், இனி தமிழ் சினிமாவிலும் ஜோஜூ கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க: Madhavan - Sudha kongara: நட்புக்கு இல்லையே எல்லை.. 20 ஆண்டுகள் தோஸ்த்டா..! மாதவனுடன் லஞ்ச் சாப்பிடும் சுதா கொங்கரா..!


Simran on Monal: 'உன்னை மிஸ் பண்றோம் மோனு..' தங்கை நினைவால் தவிக்கும் சிம்ரன்! நடிகை மோனலின் 21ம் ஆண்டு நினைவு நாள்..!