இயக்குநர் சுதா கொங்கராவும், நடிகர் மாதவனும் நல்ல நட்பில் உள்ளனர் என்பது எல்லோரும் அறிந்ததே. இந்நிலையில் சுதா கொங்கரா அண்மையில் பகிர்ந்த ட்விட்டர் போஸ்டில், மாதவனுடன் லஞ்ச் சாப்பிடும் தருணத்தைப் பதிவு செய்துள்ளார். அதில் இருபது ஆண்டுகள் நட்பு. வாங்கை அன்னம், வடியல், பொடி, சாம்பார், வத்தக் குழம்பு, தயிர் சாதம், பெண்டாலம் பச்சடி எல்லாவற்றையும்விட ரத்னகிரி அல்ஃபோன்சா மாம்பழம். உபயம் மேடி என்று பதிவிட்டுள்ளார்.
இறுதிச்சுற்று இயக்குனர்:
இயக்குநர் சுதா கொங்கரா மணிரத்னத்திடம் 7 ஆண்டுகள் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார். தொடர்ந்து கடந்த 2010ல் வெளியான துரோகி படத்தின் மூலம் தன்னை இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்திக் கொண்டார்.
படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அடுத்தடுத்து இறுதிச்சுற்று, சூரரை போற்று படங்களின் மூலம் தன்னை இந்திய அளவில் சிறப்பான இயக்குநராக உயர்த்திக் கொண்டுள்ளார். சூர்யாவை வைத்து சூரரைப் போற்று என்ற திரைப்படத்தை இயக்கினார் சுதா கொங்கரா. இந்தப் படம் கடந்த 2020ல் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளானது. தொடர்ந்து புத்தம் புது காலை, பாவக்கதைகள் ஆகிய வெப் தொடர்களிலும் ஒரு படத்தை இயக்கியுள்ளார் சுதா கொங்கரா.
சிறந்த இயக்குனர்:
துரோகி திரைப்படத்திற்கு பிறகு இரண்டாவதாக 6 ஆண்டுகள் கழித்து கடந்த 2016ல் இவரது இயக்கத்தில் வெளிவந்த இறுதிச்சுற்று திரைப்படம் குத்துச்சண்டையை மையமாக வைத்து உருவாகி இருந்தது. ரித்திகா சிங் மற்றும் மாதவன் நடித்திருந்த இந்தப் படம் பல விருதுகளை பெற்றுத் தந்தது. சாதாரண குடும்பத்தில் இருந்து ஒரு இளம்பெண் எவ்வாறு குத்துச்சண்டை போட்டிகளில் வெற்றி பெறுகிறார், அதற்கு பயிற்சியாளராக மாதவன் எவ்வாறு மெனக்கெடுக்கிறார் மற்றும் அவர்களுக்கிடையிலான காதல் என செல்லும் கதையுடன் சிறப்பான திரைக்கதையால் படம் பெரும் வரவேற்பை பெற்றது. இறுதிச்சுற்று படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான பிலிம்பேர் விருதை வென்றார்.
தொடர் தோல்வியில் துவண்டு கொண்டிருந்த நடிகர் சூர்யாவுக்கு ‘ கம்பேக்’ படமாக அமைந்த திரைப்படம் ‘சூரரைப் போற்று’.சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இந்தப்படம் தேசிய விருது வென்றது.
மாதவனுடன் லஞ்ச்:
இந்நிலையில் சுதா கொங்கரா அண்மையில் பகிர்ந்த ட்விட்டர் போஸ்டில், மாதவனுடன் லஞ்ச் சாப்பிடும் தருணத்தைப் பதிவு செய்துள்ளார். அதில் இருபது ஆண்டுகள் நட்பு. வாங்கை அன்னம், வடியல், பொடி, சாம்பார், வத்தக் குழம்பு, தயிர் சாதம், பெண்டாலம் பச்சடி எல்லாவற்றையும்விட ரத்னகிரி அல்ஃபோன்சா மாம்பழம். உபயம் மேடி என்று பதிவிட்டுள்ளார்.