ஜெயம் ரவி நடித்து நேற்று பிப்ரவரி 16 ஆம் தேதி வெளியான சைரன் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.


சைரன்


ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜய் குமார் தயாரிப்பில், நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள சைரன் படம் நேற்று பிப்ரவரி 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.


இரும்புத்திரை, விஸ்வாசம், ஹீரோ உள்ளிட்டப்  படங்களில் திரைக்கதை எழுத்தில் பணியாற்றிய அந்தோணி பாக்யராஜ் “சைரன்” திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. நடிகர் ஜெயம் ரவி இதுவரை ஏற்றிராத ஒரு புது கதாபாத்திரத்தில் இரண்டு விதமான தோற்றங்களில்  நடிக்கிறார். நடிகை கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக நடிகர் ஜெயம் ரவியுடன் இப்படத்தில் இணைந்துள்ளார்.  காமெடி மட்டுமல்லாது கதையுடன் ஒன்றிய வித்தியாசமான பாத்திரத்தில் யோகி பாபு நடிக்கிறார். மேலும் நடிகர் சமுத்திரகனி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். 


படத்தின் கதை


ஆம்புலன்ஸ் டிரைவராக இருக்கும் ஜெயம் ரவி செய்யாத குற்றத்திற்காக ஆயுள் தண்டனைக் கைதியாக  14 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படுகிறார். பின்னர் 14 நாட்கள் பரோலில் வீட்டிற்கு வருகின்றார். வீட்டில் இருக்கும் அனைவரும் அவரைப் பார்க்க ஆசையாக இருக்கு ஜெயம் ரவியின் மகள், “கொலைகார அப்பாவைப் பார்க்க மாட்டேன்” எனக் கூறி வீட்டில் இருந்து வெளியே போகிறார். தனக்கு கிடைத்த பரோலில் தனது குடும்பத்தை பார்ப்பது மட்டும் இல்லாமல், தான் 14 ஆண்டுகள் சிறையில் இருக்க காரணமானவர்களை பழி(லி)வாங்கவும் முயற்சி செய்கின்றார். அந்த முயற்சியில் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பது மீதிக்கதையாக உள்ளது. 


முதல் நாள் வசூல்






சைரன் படத்தின் காலை மற்றும் மதியக் காட்சிகளுக்கு சுமாரான வரவேற்பு இருந்த நிலையில் மாலை மற்றும் இரவு காட்சிகளுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் விடுமுறை நாட்களுக்கு படத்திற்கு இன்னும் வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.


படத்தில் சுவாரஸ்யமான திரைக்கதை, நேர்த்தியாக எடுக்கப் பட்ட ஆக்‌ஷன் காட்சிகள், ஜெயம் ரவி மற்றும் யோகி பாபுவுக்கு இடையிலான காமெடிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளன. இந்நிலையில் சைரன் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்களை சாக்னிக் தளம் வெளியிட்டுள்ளது. இதன்படி சைரன் படம் முதல் நாளில் ரூபாய் 1.4 கோடி வசூல் செய்துள்ளது.




மேலும் படிக்க : 40 years of Vijay: குழந்தை நட்சத்திரம் முதல் தளபதி வரை! 40 ஆண்டுகளை நிறைவு செய்த விஜய்!


Star Shooting Wrapped: கவின் நடித்துள்ள 'ஸ்டார்' பட ஷூட்டிங் நிறைவு! மேக்கிங் வீடியோ பகிர்ந்த படக்குழு!