காதலிக்க நேரமில்லை


கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி , நித்யா மேனன் நடித்துள்ள படம் காதலிக்க நேரமில்லை. யோகி பாபு · லால் · வினய் ராய் · டி.ஜே. பானு · ஜான் கொக்கன் · வினோதினி வைத்திநாதன் · லக்ஷ்மி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பிற நடிகர்களும் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஏ. ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். காதலிக்க நேரமில்லை படத்தின் முதல் பாடலான என்னை இழுக்குதடி பாடல் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது


காதலிக்க நேரமில்லை முதல் பாடல்


மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த் நடிப்பில் 2013ம் ஆண்டு வெளியான 'வணக்கம் சென்னை' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கிருத்திகா உதயநிதி. அப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து ‘பேப்பர் ராக்கெட்’ என்ற வெப் சீரிஸ் 2022ம் ஆண்டு வெளியானது. அதுவும் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. காதலை மையமாக வைத்து ரொமான்டிக் படமாக 'காதலிக்க நேரமில்லை' திரைப்படம் உருவாகியுள்ளது என்பது வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் அறியப்படுகிறது. மீண்டும் ஜெயம் ரவியை ஒரு ரொமான்டிக் ஹீரோவாக பார்க்க அவரின் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். 






இன்றைய தலைமுறையினரின் காதல் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் இப்படம் உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள பாடலும் அதேபோல் அமைந்துள்ளது. விவேகா பாடல் வரிகளை எழுதியுள்ளார். ரஹ்மான் மற்றும் தீ இணைந்து இப்பாடலை பாடியுள்ளார்கள். பாடல் வெளியான கொஞ்ச நேரத்திலேயே ரசிகர்கள் இப்பாடலை கொண்டாடத் துவங்கி இருக்கிறார்கள். 


 


ரஹ்மான் முன்னதாக மணிரத்னம் இயக்கிய ஓகே காதல் கண்மணி படத்திற்கு முற்றிலும் தனித்துவமான பாடல்களை வழங்கினார். அந்த வகையில்  காதலிக்க நேரமில்லை படத்தின் இப்பாடலும் அதே வைபில் உருவாகியுள்ளது. இப்படத்தில் மற்ற பாடல்களும் புதுமையான ஒரு அனுபவமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்




மேலும் படிக்க : Amaran :''ஹலோ சாய் பல்லவியா?''...ரசிகர்கள் கொடுத்த டார்ச்சரால் விபரீதம்..எப்படி சமாளிக்கப் போகிறது அமரன் படக்குழு?


Aakash Baskaran : விக்னேஷ் சிவனின் உதவி இயக்குநர் டூ தனுஷ் பட தயாரிப்பாளர்...யார் இந்த ஆகாஷ் பாஸ்கரன்