ஆகாஷ் பாஸ்கரன் திருமணம்
நடிகர் தனுஷ் தற்போது இட்லி கடை படத்தை இயக்கி நடித்து வருகிறார். நித்யா மேனன் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். டான் பிக்ச்சர்ஸ் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் இப்படத்தை தயாரித்து வருகிறார். ஆகாஷ் பாஸ்கரனின் திருமணம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகை நயன்தாரா , விக்னேஷ் சிவன் , தனுஷ் , சிவகார்த்திகேயன், அனிருத் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டார்கள். நடிகை நயன்தாரா பற்றிய ஆவணப்படம் குறித்து தனுஷ் மட்டும் நயன் இடையில் கடும் சர்ச்சை வெடித்தது. இந்த நிகழ்வு நடந்து முதல் முறையாக இரு நட்சத்திரங்களும் இந்த திருமணத்தில் கலந்துகொண்டார்கள்.
ஒரு பக்கம் நயன்தாரா கால்மேல் கால்போட்டு கெத்தாக அமர்ந்திருக்க மறுபக்கம் தனுஷ் நயன் பக்கமே திரும்பாமல் உட்கார்ந்திருக்கும் புகைப்படங்களை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். பலர் இந்த புகைப்படத்தை ரஜினியின் படையப்பா படத்துடன் ஒப்பிட்டு பேசி வருகிறார்கள். இவ்வளவு பெரிய சர்ச்சைக்குப் பின்னும் தனுஷ் , நயன் இந்த திருமணத்தில் கலந்துகொண்டதற்கு முக்கிய காரணம் ஆகாஷ் பாஸ்கரன் விக்னேஷ் சிவனின் உதவி இயக்குநர் என்பதே.
யார் இந்த ஆகாஷ் பாஸ்கரன்
விக்னேஷ் சிவன் இயக்கிய தனுஷ் தயாரித்த நானும் ரவுடிதான் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார் ஆகாஷ் , தொடர்ந்து காத்துவாக்குல ரெண்டு காதல், பாவக்கதைகள் ஆகிய படங்களிலும் விக்னேஷின் சிவனின் உதவி இயக்குநராக பணியாற்றினார். தற்போது தனுஷ் இயக்கி வரும் இட்லி கடை படத்தையும் இவர் தயாரித்து வருகிறார். இதன் காரணத்தினால் தனுஷ் நயன் இடையில் பிரச்சனை இருந்தபோதும் இருவரும் இந்த திருமணத்தில் கலந்துகொண்டார்கள்.
இட்லி கடை
இட்லி கடை படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது பேங்காக்கில் நடைபெற்று வருகிறது. 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.