சென்னை திருவெற்றியூரை சேர்ந்த தம்பதியினர். இவர்களுக்கு 14 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் ஒரு ஆண் குழந்தை என மூன்று குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து வாழ்ந்து வரும் பெண்மணி கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது இரண்டாவது மகளான 13 வயது சிறுமியை தந்தையின் பொறுப்பில் விட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்று கிழமை தாயை சந்திக்க வீட்டிற்கு வந்த சிறுமியை தந்தை பின் தொடர்ந்து வந்து, சிறுமியின் தாயிடம் சண்டையிட்டதாக தெரிய வருகிறது.
அப்போது அவ்வழியாக வந்த ரோந்து பணியில் இருந்த திருவெற்றியூர் போலீசார் ஒருவர் தடுத்து அனுப்பிய நிலையில் , சிறுமி தனது தந்தையும் தனது பெரியப்பாவின் மகனான அண்ணன் முறை கொண்ட இருவரால் தனக்கு நேர்ந்த கொடுமையை முதல் முறையாக வாய்விட்டு கதறி அழுது தாயிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தாய் திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் பெண் ஆய்வாளர் வரலட்சுமி புகாரை ஏற்க மறுத்ததாக தெரிகிறது.
இதன் பின் இன்று பாதிக்கப்பட்ட சிறுமி வயிற்று வலியால் அவதிப்பட்டு இருக்கிறார். சிறுமியை ராயபுரத்தில் உள்ள ஆர்.எஸ்.ஆர்.எம் அரசு முகப்பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பாக சிறுமியின் தாயார் கூறும்போது ;
கடந்த திங்கட்கிழமை காலையில் இருந்து திருவொற்றியூர் காவல் நிலையம் சென்று நான் புகார் அளித்ததாகவும் , ஆனால் புகாரை ஏற்று கொள்ள மகளிர் போலீசார் மறுத்து பின்னர் ஆய்வாளர் இல்லை என கூறி அனுப்பி வைத்ததாகவும், தொடர்ந்து தான் காவல் நிலையம் செல்லும் போதெல்லாம் ஆய்வாளர் உள்ளே இருந்தாலூம் இல்லை என கூறியதாகவும் ,
சிறுமியின் தந்தையும் அண்ணனும் மன்னிப்பு கேட்டு விட்டார்கள். அதனால் மன்னித்துவிடு என தன்னை சமரசம் செய்த நிலையில் அதை தாம் ஏற்று கொள்ளாத போது, புகார் எழுத பேப்பரை கேட்ட நிலையில் அதை தூக்கி வீசியதாகவும் கண்ணீர் மல்க கூறினார்.
இப்படி தாய் கூறும் பொழுதே அங்கு அந்த பெண்மணியை அவமதித்த ஆய்வாளர் வரலட்சுமி வந்த நிலையில் அவரை கண்டதும் ஆத்திரத்தில் கத்தி கூச்சலிட்டார். மகப்பேறு மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் கத்தி கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அங்கிருந்த மற்ற மகளிர் போலீசார் உள்ளே மருத்துவர்கள் அழைப்பதாக கூறி அழைத்து சென்றனர்.
பெற்றெடுத்த தந்தையாலும் தந்தையின் அண்ணன் மகனான அண்ணன் முறை கொண்டவராலும் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்ய்பட்டதாக தாய் கூறி கண்ணீர் விட்டு கதறி அழுவது அதிர்ச்சியையும் அதற்கு ஆய்வாளர் வரலட்சுமி சமாதானமாக செல்ல அறிவுறுத்தியது. அந்த ஆய்வாளரின் பொறுப்பின்மை மற்றும் மெத்தனத்தை காட்டுவதாக அங்கிருந்தவர்கள் கூறினர்.