தனுஷ்


பல்வேறு குற்றச்சாட்டுகள், மனைவியுடன் விவாகரத்து , இன்னொரு பக்கம் நடிப்பு இயக்கம் என எல்லாவற்றையும் சமாளித்து வருகிறார் நடிகர் தனுஷ். சமீபத்தில் நயன்தாரா அறிக்கை வெளியிட்டு தனுஷ் மீத் நேரடியாக பல குற்றச்சாட்டுக்களை வைத்து நேரடியாக தாக்கினார். இது குறித்து தனுஷ் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இன்னொரு பக்கம் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் தனுஷை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். யாருக்கும் விவாகரத்து ஆனாலும் அதற்கு தனுஷ் தான் காரணம் என நெட்டிசன்கள் அவரை தொடர்ச்சியாக தாக்கியும் வருகிறார்கள். 


தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து


இன்னொரு பக்கம் தனுஷ் தனது மனைவியுடன் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நேற்று நவம்பர் 21 ஆம் தேதி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதி சுபாதேவி முன் விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே மூன்று முறை விசாரணைக்கு ஆஜ்ராகாத தனுஷ் ஐஸ்வர்யா நான்காவது முறையாக நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இந்த வழக்கில் வரும் நவம்பர் 27 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது.


திருமண நிகழ்ச்சியில் தனிமரமாக நின்ற தனுஷ்


தனுஷ் நயன்தாரா சர்ச்சை ஒட்டுமொத்த திரையுலகையே ஒரு ரவுண்ட் வந்தப்பின் முதல் முறையாக இரு நட்சத்திரங்களும் ஒரே நிகழ்ச்சியில் சமீபத்தில் சந்தித்துக் கொண்டார்கள். தனுஷ் இயக்கிவரும் இட்லி கடை படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் திருமணத்தில் நடிகர் தனுஷ் கலந்துகொண்டார். இதே நிகழ்ச்சியில் நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் கலந்துகொண்டார். கூடுதலாக சிவகார்த்திகேயன் , அனிருத் உள்ளிட்டவர்கள் இந்த திருமண நிகழ்ச்சியில் காணப்பட்டார்கள். நிகழ்ச்சியில் ஒருபக்கம் தனுஷ் இன்னொரு பக்கம் நயன்தாரா என பார்ப்பதற்கு இந்த காட்சி பலருக்கு படையப்பா படத்தை நினைவுபடுத்தியுள்ளது. 


மேடையில் மணப்பெண்ணுடன் நயன்தாரா , விக்னேஷ் சிவன் , அனிருத், சிவகார்த்திகேயன் என அனைவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள தனுஷ் மற்றும் அவரது மேலாளர் ஷ்ரேயஸ் இருவரும் மணமக்களோடு புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். பலரது வளர்ச்சிக்கு காரணமாக இருந்த தனுஷ் இப்படி தனியாக நிற்பதை பார்த்து அவரது ரசிகர்கள் தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.