Japan Special Shows: தீபாவளி பண்டிகையை ஒட்டி திரைக்கு வரும் ஜப்பான் படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. 


ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ஜப்பான் படம் வரும் 10ம் தேதி தீபாவளி ரிலீசாக திரைக்கு வருகிறது. குக்கூ, ஜிப்சி, ஜோக்கர் உள்ளிட்ட படங்களை இயக்கி விமர்சன ரீதியாக பிரபலமான ராஜூ முருகன் ஜப்பான் படத்தை இயக்கியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்து வருகிறது. அதேநேரம், காமெடியிலும், ஆக்‌ஷனிலும் கார்த்தி அசத்துவதால் அவரது நடிப்பில் மற்றொருமொரு ஃபுல் என்டர்டெய்ன்மெண்ட் படமாக ஜப்பான் பார்க்கப்படுகிறது.


டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ஜப்பான் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். கார்த்தியுடன் இணைந்து அனு இமானுவேல், தெலுங்கு நடிகர் சுனில், விஜய் மில்டன், பவா செல்லதுரை என பலர் நடித்துள்ளனர். முன்னதாக டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், டச்சிங் டச்சிங் பாடலும் வெளியாகியுள்ளது. ஜப்பான் படம் திரைக்கு வர இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் சிறப்பு காட்சி இருக்குமா? என்ற கேள்வி எழுந்தது. 


இந்த நிலையில் ஜப்பான் படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிவிப்பில், “தீபாவளியை ஒட்டி திரைக்கு வரும் ஜப்பான் படத்திற்கு நவம்பர் 10ம் தேதி முதல் 20ம் தேதி வரை சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வேண்டும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் கோரிக்கை விடுத்து வந்தது. அதை ஏற்று கொண்டு தீபாவளி பண்டிகைக்காக திரைக்கு வரும் ஜப்பான் படத்திற்கு நவம்பர் 10ம் தேதியில் இருந்து 15ம் தேதி வரை சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 5 காட்சிகள் மட்டுமே திரையிட வேண்டும். காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்கி இரவு 1.30 மணிக்குள் கடைசி காட்சி முடிய வேண்டும்” என தமிழக அரசின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. சிறப்பு காட்சிக்கு அனுமதி கிடைத்துள்ளதால் படக்குழு மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளது. 






மேலும் படிக்க: Jigarthanda Double X: ரஜினி - கமல் நடிப்பில் ‘ஜிகர்தண்டா 2’..கார்த்திக் சுப்பாராஜ் பகிர்ந்த சுவாரஸ்யம்!


Karthik Subbaraj: ஷங்கருக்கும் எனக்கும் இடையில் ஈகோ பிரச்னையா.. ‘கேம் சேஞ்சர்’ கதையை எழுதிய கார்த்திக் சுப்புராஜ் பளிச்!