By: ராகேஷ் தாரா | Updated at : 31 Oct 2026 03:25 PM (IST)
ஜெயிலர் 2 , ரஜினிகாந்த் ( Image Source : Other )
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் அன்கட் வெர்ஷனை ஓடிடியில் வெளியிடுவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. திரையரங்குகளில் வெளியான பதிப்பைவிட சுமார் 30 நிமிடங்கள் கூடுதல் காட்சிகள் இடம்பெறும் வகையில் புதிய பதிப்பு தயாராக இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மோகன்லால், ஹிருத்திக் ரோஷன், சந்தானம் ஆகியோரின் கூடுதல் காட்சிகள் இதில் இடம்பெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நெல்சன் ரஜினி கூட்டணியில் உருவான ‘ஜெயிலர் 2’ திரைப்படம் அக்டோபர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வெளியான 16 நாட்களில் ‘ஜெயிலர் 2’ உலகளவில் ரூ.776.95 கோடி வசூலித்துள்ளது. இந்தியாவில் ரூ.509.45 கோடியும், வெளிநாடுகளில் ரூ.267.50 கோடியும் வசூல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் ஜெயிலர் 2 திரைப்படம் ரூ200 கோடி வசூலை கடந்துள்ளது.
ஜெயிலர் 2 படத்தில் படத்தில் பல்வேறு நடிகர்கள் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்கள். மோகன்லால் , ஷிவராஜ்குமார் , ஹ்ரித்திக் ரோஷன் , சந்தானம் , விஜய் சேதுபதி ஆகிய பெரும் நடிகர்கள் பட்டாளம் இப்படத்தில் உள்ளனர். ஆனால் ரசிகர்கள் எதிர்பார்ப்பிற்கு மாறாக இந்த நடிகர்களின் ஒரு சில காட்சிகள் மட்டுமே படத்தில் இடம்பெற்றன. குறிப்பாக, மோகன்லாலின் மேத்யூ கதாபாத்திரத்துக்கான காட்சிகள் குறைவாக இருந்தது மலையாள ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதேபோல், இரண்டாம் பாதியில் சந்தானம் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரது காட்சிகள் படமாக்கப்பட்டு படத்தில் இடம்பெறாதது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் , சுமார் 30 நிமிட கூடுதல் காட்சிகளுடன் ஜெயிலர் 2 படத்தின் அன்கட் வெர்ஷன் ஓடிடியில் வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மோகன்லால் , ஹ்ரித்திக் ரோஷன் ,சந்தானம் விஜய் சேதுபதி ஆகியோரது 30 நிமிட காட்சிகள் கூடுதலாக இணைக்கப்பட்டு படம் ஓடிடியில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
மூன்றாவது வாரத்தில் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஜெயிலர் 2 800 கோடி வசூலை நெருங்குகிறது. அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படமாக ஜெயிலர் 2 சாதனை படைத்துள்ளது . ஆனால் படம் 1000 கோடி வசூல் செய்வதற்கான சாத்தியங்கள் குறைவாகவே உள்ளன. தீபாவளி பண்டிகை வரை ஜெயிலர் 2 படத்திற்கு திரையரங்கில் நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழ் சினிமாவின் முதல் 1000 கோடி வசூல் செய்த படமாக ஜெயிலர் 2 படம் அமையுமா என்கிற ரசிகர்களின் விருப்பம் நீடிக்கும் .
டிக்கெட் விலை உயர்வு...சிறப்புக் காட்சி அனுமதி..முதலவர் விஜய்க்கு திரையரங்க உரிமையாளர்கள் 9 கோரிக்கைகள்
தளுக்கு புளுக்கு தக்காளி... இன்ஸ்டாகிராமில் ஆதிக்கம் செலுத்தும் ஏஐ காய்கறி கேரக்டர்கள்! நெட்டிசன்கள் ஜாலி!
Karthigai Deepam: இதயத்துடன் வரும் கார்த்திக்.. ஆம்புலன்ஸ் டிரைவர் செய்த சதி! சாமுண்டீஸ்வரி உயிர் பிழைப்பாரா?
தொழிலதிபர் சண்முகப்பிரியா உதயநிதி ஸ்டாலின் படத்தில் பணியாற்றியுள்ளாரா! அதிர்ச்சி பின்னணி
இளையராஜா அவுட் ஜிவி பிரகாஷ் இன்...பாக்கெட் நாவல் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அந்தமான் அருகே 24 மணி நேரத்தில் உருவாகும் புயல்! - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட் என்ன?
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!
மெத்தனமாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை! - சிறைத்துறையினருக்கு முதலமைச்சர் எச்சரிக்கை!
இந்தியாவின் இரும்பு மனிதர்: பிரதமர் பதவிக்கான நேருவின் போட்டியாளர் - யார் இந்த வல்லபாய் படேல்?
உங்கள் ப்ரௌசிங் அனுபவத்தை மேம்படுத்தவும் சிறப்பு பரிந்துரைகளை வழங்கவும் இந்த வலைத்தளம் குக்கீகள் அல்லது ஒத்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.