இந்தியன் 2 திரைப்படத்தில் மனோ பாலா வரும் காட்சிகளில் இ.சேவை மையத்தினரை அவதூறு பரப்பும் விதமாக எடுக்கப்பட்ட காட்சிகளை நீக்காவிட்டால் கண்டன ஆர்ப்பாட்டங்கள் மற்றும் நீதிமன்றத்தில் வழக்கு  தொடரப்போவதாக திண்டுக்கல்லில் இ சேவை மைய உரிமையாளர் சங்கத்தினர் பேட்டியளித்தனர்.




கமல்ஹாசன் நடிப்பில், பிரமாண்டத்திற்கு பெயர்போன ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1996ம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன். ஊழலுக்கு எதிரான வலுவான கருத்துகளை முன்வைத்த இப்படம் பெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில், 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாக உள்ளது. லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படத்திற்கு, அனிருத் இசையமைத்துள்ளார். சித்தார்த், மறைந்த நடிகர்களான விவேக் மற்றும் மனோபாலா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படம் வெளியாகி தற்போது கலவையான விமர்சனங்களுடன் திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது.


கடலில் கவிழ்ந்த கப்பல்! மாயமானவர்களில் 9 இந்தியர்கள் மீட்பு - ஒருவர் உயிரிழப்பு


இந்த நிலையில் திண்டுக்கல் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திண்டுக்கல் மாவட்ட இ-சேவை மைய உரிமையாளர்கள் நல சங்கம் சார்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், இந்தியன் 2 திரைப்படத்தில் மனோ பாலா வரும் காட்சியில் இ-சேவை மையத்தினர் 300 ரூபாய் கொடுத்தால் மட்டுமே சேவை செய்ய முடியும் என தவறுதலாக சித்தரித்து எடுக்கப்பட்ட காட்சிகளை நீக்க வேண்டும்.


எத்தனை சிம்கார்டுகள் வச்சிருக்கீங்க? இனி சிறைதான்! புது சட்டம் கொண்டுவந்த அரசு! விதிகள் இதுதான்!


அப்படி எடுக்கப்பட்ட காட்சிகளினால் தமிழகத்தில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இ-சேவை மைய உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்பட்டு வருகிறது.




எனவே இதைத் தொடர்ந்து துறையின் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் மாவட்ட ஆட்சியரிடம் இ-சேவை உரிமையாளர் நல சங்கம் சார்பாக இந்தியன் திரைப்பட இயக்குனர் ஷங்கர் மீது புகார் மனு அளிக்கப்பட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் மேலும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடவடிக்கைகள் எடுக்காத பட்சத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர போவதாக திண்டுக்கல் மாவட்ட இ-சேவை மையம் உரிமையாளர்கள் நலச் சங்கத் ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட தலைவர் தனராஜ் பேட்டி அளித்துள்ளார்.