தென் இந்திய சினிமாவில் உள்ள கலைஞர்கள் மட்டும் இல்லாமல் தென் இந்திய சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் கலைஞர்களில் முதன்மையானவராக இருப்பவர் இசைஞானி இளையராஜா. இவரது இசையைக் கேட்டவர்கள் அதனை ரசிக்காமல் இருக்கவே முடியாது. மிகவும் சாதாராண குடும்பத்தில் பிறந்து தனது விடா முயற்சியாலும் இசை அறிவினாலும் அனைத்து தலைமுறை இசைப் பிரியர்கள் மத்தியில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர். 


இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாகவுள்ளது எனவும் அந்த படத்தில் இளையராஜாவின் கதாப்பாத்திரத்தை நடிகர் தனுஷ் ஏற்று நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் இப்படத்திற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் முடிந்துவிட்டதாகவும் இந்த படத்தினை பிரபல இயக்குநர் இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 


அதன்படி படத்தினை நடிகர் தனுஷை வைத்து கேப்டன் மில்லர் படத்தினை இயக்கிய இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கேப்டன் மில்லர் படம் ஒரு பிரியட் மூவி என்பதால், அந்த படத்தில் அருண் மாதேஸ்வரனின் அர்பணிப்பு தனுஷை மிகவும் கவர்ந்துவிட்டதால், இளையராஜாவின் பயோ-பிக் படத்தை இஅவரை இயக்கச் சொல்லலாம் என தனுஷ் யோசித்தாராம். இது தொடர்பாக இளையராஜாவிடன் தனுஷ் பேசியதாகவும், இளையராஜா அதற்கு ஓ.கே. சொன்னதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.




ஆக்‌ஷன் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரனுக்கு இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்குவது அவருக்கு புது அனுபவமாக இருக்கலாம் என கூறப்படுகின்றது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஜனவரி 12ஆம் தேதி வெளியான கேப்டன் மில்லர் படத்தில், தனுஷ், பிரியங்கா மோகன், ஷிவராஜ் குமார், சந்தீப் கிஷன், நிவேதா சதீஷ், அதிதி பாலன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜி.வி பிஷகாஷ் இந்தப் படத்துக்கு இசையமைத்திருந்த நிலையில், சத்யஜோதி ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்திருந்தது.


நடிகர் தனுஷ் தற்போது தனது 50வது படத்தினை இயக்கி நடித்து அதனை வெளியிடுவதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார். இந்த படத்திற்கு ராயன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது மட்டும் இல்லாமல் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தை இளம் நட்சத்திரங்களை வைத்து இயக்கி வருகின்றார். தனுஷின்  


தனுஷின் ராயன் படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷாரா, அபர்ணா மற்றும் வரலஷ்மி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.  


வடசென்னையைச் சேர்ந்த மூன்று சகோதரர்களின் கதையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகி இருப்பதாக முன்னதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.  தனுஷூடன் கேப்டன் மில்லர் படத்தில் இணைந்து நடித்த சந்தீப் கிஷன் மற்றும் நடிகர் காளிதாஸ் இப்படத்தில் தனுஷின் சகோதரர்களாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




Ameer: தண்டிக்கப்பட வேண்டும்.. ஜாஃபர் சாதிக் பற்றி அமீர் வெளியிட்ட அறிக்கையால் பரபரப்பு


Ajith Kumar Salary : 10 வருடத்திற்கு முன் அஜித் வாங்கிய சம்பளம் என்ன தெரியுமா மக்களே...கேட்டா ஷாக் ஆகிடுவீங்க