தமிழ் சினிமாவில் வாரம்தோறும் ஏராளமான திரைப்படங்கள் வெளியாகின்றன. பெரிய ஸ்டார் நடிகர்கள் நடித்த படங்களின் வருகையும் அதிகரித்து வந்தாலும் எதிர்பார்த்த அளவு அவை பெரிய அளவில் வரவேற்பை பெற தவறி விடுகிறது. ஸ்டார் நடிகர்களின் பேஸ் வேல்யூவிற்காக ஓரளவுக்கு வரவேற்பையும் வசூலையும் பெற்றாலும் திரைக்கதை அளவில் மிகவும் சுமாராகவே இருக்கின்றன. அதனால் அவை ரசிகர்களின் மனதில் நிலைக்காமல் போய்விடுகின்றன. 


ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற படங்களை திரையரங்கில் மறுபடியும் ரீ ரிலீஸ் செய்து வெளியிடுவது தான் தற்போதைய ட்ரெண்ட். அப்படி ரீ ரிலீஸ் செய்யப்படும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பு கிடைதுள்ளது. இது குறித்து பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு சென்னையில் மிகவும் பிரபலமான திரையரங்கமான கமலா திரையரங்கத்தின் திரையரங்க உரிமையாளர் விஷ்ணு கமல் பதில் அளித்துள்ளார்.


 




தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு 'வேலையில்லா பட்டதாரி' மற்றும் '3' படத்தை ஒரு ஷோ மட்டும் போட்டோம். அந்த சமயத்துல நிறைய ஆடியன்ஸ் டிக்கெட் கிடைக்காம திரும்பி போனாங்க. அப்ப தான் எங்களுக்கு ஒரு ஐடியா வந்தது. இது போல ஹிட் அடித்த பழைய படங்களை ரீ ரிலீஸ் செய்தால் மக்கள் கூட்டம் தியேட்டருக்கு வரும் என தோணுச்சு. 


இது போன்ற படங்கள் தியேட்டரில் ரிலீஸாகும் போது எங்களை மாதிரி இளைஞர்கள் எல்லாரும் ரொம்ப சின்ன பசங்களா, ஸ்கூல் படிக்குற பசங்களா இருந்து இருப்போம். அதனால் இந்த படங்களை தியேட்டர்ல பாக்குற அனுபவம் எங்களுக்கு கிடைக்கல. என்ன தான் போன்ல, டிவில இந்த படங்களை பாத்தாலும், தியேட்டர்ல பாக்குற அந்த எஃபெக்ட், பீல்லே தனி. அதனால மக்களை தியேட்டருக்கு வர வைக்கிறதுக்கு தான் ரீ ரிலீஸ் கான்செப்டை நாங்க பண்ணோம். டிக்கெட் விலை அதிகமா இருக்குன்னு நிறைய பேர் பீல் பண்ணதால அதை குறைச்சா நிறைய மக்கள் தியேட்டர் வருவாங்கனு டிக்கெட் விலை வெறும் 49 ரூபாய், 69 ரூபாய்க்கு தான் போட்டோம். ரீ ரிலீஸ் படங்களுக்கு இப்படி வைச்சா நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்கும் என நினைச்சோம். 


அடுத்ததா தியேட்டருக்கு வர மக்களை சந்தோஷப்படுத்தனும் என்பதற்காக  அவர்களுக்கு பிடித்த பாடலை ஒன்ஸ்மோர் போட்டு சவுண்ட் கம்மியா வைக்குறேன், நீங்க எல்லாரும் பாடுறீங்களானு கேட்டேன். அது நல்லா ஒர்க் அவுட்டாகி  சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆச்சு. ரீ ரிலீஸ் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைச்சு இருக்கு. காலேஜ் ஸ்டூடெண்ட்ஸ் தான் அதிகமா வராங்க. அவங்களோட வைப் வேற லெவலில் இருக்கு. பேமிலி ஆடியன்ஸை கவரும் வகையில் அண்ணாமலை, சிவா மனசுல சக்தி படம் எல்லாம் போட்டோம்.  வெளியில இருக்க பேனரை பார்த்து இது கமலா தியேட்டரா இல்ல 'கே' டிவியா கேக்குறாங்க. 


அடுத்ததாக பாஸ் என்கிற பாஸ்கரன் படம் ரீ ரிலீஸ் பண்ணலாம் என பிளான் பண்ணியிருக்கோம்" என விஷ்ணு கமல் கூறி இருந்தார்  என்பது குறிப்பிடத்தக்கது.