இயக்குநர் சிவா ரஜினியை வைத்து அண்ணாத்த படத்தை இயக்கினார். கிராமத்து கதைகளையும்,  குடும்பத்து உணர்வுகளையும் வைத்து வீரம், விஸ்வாசம் என அஜித்திற்கு அவர் ஹிட் கொடுத்ததால் ரஜினியை வைத்து எடுத்திருக்கும் அண்ணாத்த படமும்  அந்த வெற்றி வரிசையில் இணையும் என ரஜினி ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.


படமும் தீபாவளியையொட்டி நவம்பர் நான்காம் தேதி வெளியானது. நீண்ட வருடங்கள் கழித்து ரஜினி கிராமத்து கதையில் நடித்திருப்பதால் அண்ணாத்த படத்துக்கு ரஜினி ரசிகர்கள்  கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு படையெடுத்தனர்.


ஆனால், படம் எதிர்பார்த்தபடி இல்லை என ரஜினி ரசிகர்களே நொந்துகொண்டனர். முக்கியமாக, படத்தின் கதையில் எந்த புதிதான விஷயமும் இல்லை என விமர்சகர்களாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.


அதேசமயம், படம் வெளியான முதல் நாளில் மொத்தம் 70 கோடி ரூபாய் வசூல் செய்தது தமிழ்நாட்டில் மட்டும் 34 கோடி ரூபாய் வசூலித்ததாகவும் தகவல் வெளியானது . அதுமட்டுமின்றி படம் வெளியான இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் 112 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.




இந்நிலையில் அண்ணாத்த பட இயக்குநர் சிவா தனியார் சேனல்  ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “சூர்யாவின் ‘சூரரைப் போற்று’, ’ஜெய் பீம்’ பார்த்தேன். சூப்பராக உள்ளது. இரண்டும் மிகச்சிறந்த படங்கள். இயக்கியவர்கள் மிகச்சிறந்த இயக்குநர்கள். 


மிகச்சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார் சூர்யா. ’ஜெய் பீம்’ படத்தில் சூர்யா, மணிகண்டன்  என அனைவரது நடிப்பும் மிகவும் பிடித்திருந்தது. அடுத்ததாக சூர்யாவுடன் பணிபுரிய ஆவலாக இருக்கிறேன். அவருக்காக செம சுவாரசியமான கதை தயார் செய்து வைத்துள்ளேன்” என்று கூறினார்.




முன்னதாக, ஜெய் பீம் திரைப்படம் தமிழில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. படம் வந்த பிறகு அதனை பார்த்த அனைவரும் இதுபோல் இனி ஒரு படம் வராது என்று உச்சி முகர்கின்றனர். படத்தை தயாரித்து அதில் நடித்த சூர்யாவுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: Annaatthe Box Office Collection: சூப்பர் ஸ்டார் தீபாவளி... 2 நாளில் ரூ.100 கோடி வசூலித்த ‛அண்ணாத்த’


Jai Bhim: ‛சேட்ஜியை அறைந்தது சரி தான்...’ பின்வாங்கப் போவதில்லை என பிரகாஷ்ராஜ் பேட்டி!