2020ஆம் ஆண்டில் மதுபோதையில் வாகனம் ஓட்டியதால் அதிக உயிரிழப்புகளை சந்தித்த மாநிலங்களில் நாட்டிலேயே சென்னை மாநகரம் உள்ளது.


இதுதொடர்பாக தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம் வெளியிட்ட அறிக்கை:


நாட்டிலுள்ள 53 மெகா சிட்டிகளில், போதைப்பொருள் அல்லது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் இறப்புகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக சென்னையில் பதிவாகியுள்ளது. நாட்டிலேயே கடந்தாண்டு மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்துகளில் 462 பேர் இறந்துள்ளனர். இதில் சென்னையில் 236 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் மது போதையில் வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட மொத்த இறப்புகளில் 83 சதவீதம் சென்னையில் பதிவாகியுள்ளது.


2020 ஆம் ஆண்டில் நகரங்களில் இரண்டாவது அதிக சாலை விபத்து இறப்புகளை சென்னை பதிவு செய்துள்ளது. சென்னையில் நான்கில் ஒரு சாலை விபத்து இறப்பு, மது போதையில் வாகனம் ஓட்டியதால் ஏற்பட்டது.


மதுபோதையில் வாகனம் ஓட்டியதற்காக சாலைப் பாதுகாப்புக்கான உச்ச நீதிமன்றக் குழுவால் சஸ்பெண்ட் செய்யப்படும் ஓட்டுநர் உரிமங்கள் 2019 இல் 20,212 இல் இருந்து 2020 இல் 7,290 ஆகக் குறைந்துள்ளது. 2018 இல் 45,113 ஆகவும், 2017 இல் 30,393 ஆகவும் இருந்தது.




2019 ஆம் ஆண்டை ஒப்பிடும் போது 2020 ஆம் ஆண்டில் விபத்துக்கள் மற்றும் இறப்புகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை குறைந்துள்ளதாக போக்குவரத்து துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


 “மது போதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் உயிரிழப்புகள் ஏன் அதிகரித்துள்ளன என்பதற்கு எந்த குறிப்பிட்ட காரணமும் இல்லை" என்று போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறினார். 


கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் மதுபோதையில் வாகனம் ஓட்டியதற்காக குறைந்த எண்ணிக்கையிலான ஓட்டுநர் உரிமங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து கேட்டபோது, கொரோனா தொடர்பான பணிகளில் அதிகம் ஈடுபட்டதன் காரணமாக மோட்டார் வாகன விதிகளை அமல்படுத்துவது பாதிக்கப்பட்டதாக அந்த அதிகாரி கூறினார்.


தீபாவளி மதுவிற்பனை வசூல்


நடப்பாண்டில் தீபாவளிக்கு முதல்நாள் மற்றும் தீபாவளியன்று மட்டும் தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் ரூபாய் 431 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. இது கடந்தாண்டு விற்பனையை காட்டிலும் குறைவு ஆகும். கடந்தாண்டு தீபாவளிக்கு ரூபாய் 466 கோடிக்கு மதுபானங்கள் விற்கப்பட்டது. நடப்பாண்டில் கடந்தாண்டை விட ரூபாய் 35 கோடி குறைவாக விற்கப்பட்டுள்ளது.  


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூட்யூபில் வீடியோக்களை காண