நாடிகர் ஷாருக்கான், ‘ஜவான்’ பிரிவ்யூ வீடியோவுக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில், அதற்கு படத்தின் இயக்குநர் அட்லீ நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.


ஜவான் திரைப்படத்தின்‘பிரிவ்யூ’ கடந்த ஜூலை 10 வெளியானது. ட்விட்டரில் இயக்குநர் அட்லீ பகிர்ந்திருந்த பிரிவ்யூ வீடியோவை மேற்கோள்காட்டி நடிகர் ஷாருக்கான், “சார்..மாஸ்.. எல்லாவற்றிற்கும் நன்றி” என பதிவிட்டிருந்தார். இதற்கு பதில் ட்வீட் செய்துள்ள இயக்குநர் அட்லீ, “ராஜாக்களின் கதைகளை கேட்டு நிஜத்தில் அப்படியான ஒருவருடன் பயணம் செய்வது வரை, நான் கனவு கண்ட வாழ்க்கையை வாழ்கிறேன் என நினைக்கிறேன்.


இந்தப் படம் என்னுடைய எல்லைக்கு என்னை கொண்டு சென்றது. இந்தப் பயணத்தில் விலைமதிக்க முடியாத அனுபவங்களைப் பெற்றேன். சினிமா மீதான உங்கள் ஆர்வத்தையும், கடின உழைப்பையும் கடந்த 3 வருடங்களாக உன்னிப்பாக கவனித்து வந்த எனக்கு அது மிகப் பெரிய உத்வேகம் அளித்தது. லவ் யூ சார். இந்த சிறப்பான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததற்கு மொத்த படக்குழு சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.






இயக்குனர் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர்  நடித்து வருகின்றனர். தீபிகா படுகோன், சஞ்சய் தத் ஆகியோர் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படம் வரும் செப்டம்பர் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.


நடிகர் ஷாருக்கானின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த பதான் திரைப்படம் வசூல் வேட்டை நடத்தியது. இந்தி ரசிகர்கள் மத்தியில் இப்படம் கொண்டாடப்பட்டது.  ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.  அட்லி திரைப்படம் என்றாலே ஸ்கிரீன் ப்ளே நன்றாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும் .இப்படி இருக்கையில் ஷாருக்- அட்லீ காம்போவில் உருவாகி வரும் ஜவான் படத்தின் மீதான எதிர்பார்ப்பில் ரிலீசுக்காக காத்திருக்கின்றனர் ரசிகர்கள். 


மேலும் படிக்க 


Kalaignar Womens Assistance Scheme: வந்தது அறிவிப்பு! மகளிர் உரிமைத் தொகைக்கு இது கட்டாயம்... தமிழ்நாடு அரசு சொல்றத கேளுங்க!


Mission Impossible 7 Review: தங்கத்தட்டில் தரமான ஆக்‌ஷன் விருந்து... மிரள வைத்தாரா டாம் க்ரூஸ்? மிஷன் இம்பாசிபள் 7 விமர்சனம்!