Sivakarthikeyan First Love: எனக்கும் ஒரு காதல் கதை இருந்துச்சு.. ஆனா! : சிவகார்த்திகேயன் சொன்ன சீக்ரெட்..

எனக்கும் ஒரு காதல் கதை இருந்தது, ஆனால் ஒருதலைக் காதலாகவே முடிந்தது என  நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

Continues below advertisement

பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்கள்:

Continues below advertisement

நடிகர் சிவகார்த்திகேயன் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அப்போது சிவகார்த்திகேயனிடம், உங்களி பற்றி யாருக்கும் தெரியாத ரகசியங்களை கூறுங்கள் என ஒருவர் கேட்டார். அதற்கு யாருக்குமே தெரியாத ரகசியத்தை மேடை போட்டு சொல்ல சொல்றீங்க என நகைச்சுவையாக கூறினார்.

எனக்கும் ஒரு காதல் கதை:

தொடர்ந்து பேசிய சிவகார்த்திக்கேயன், எனக்கு ஒரு பெண் மீது ஒருதலை காதல் இருந்தது. பின் அந்த பெண் வேறொரு பையனுடன் காதல் வயப்பட்டு விட்டார். அப்போது என் ஒருதலைக்காதல் முறிந்து விட்டது என நகைச்சுவையாக கூறினார். இக்காதல் கதை என் கல்லூரி நண்பர்கள் வட்டத்தில் சிலருக்கு மட்டுமே தெரியும், இதுதான் மறைக்கப்பட்ட ரகசியமாக இருக்கக் கூடும் என்றும் தெரிவித்தார். மற்றபடி பெரிய பிரச்னைகள் எதுவும் இல்லை. எனக்கு பயம், யாராவது என் வீட்டிற்கு வந்து உங்கள் மகன் இந்த பிரச்சனை செய்துவிட்டான் யாரும் வந்து விடக்கூடாதென்று. அதனால் அமைதியான பையனாக பள்ளிக் காலங்களில் இருப்பேன் .பாடல் ஆசிரியர் விவேக்கும், நானும் ஒரே வகுப்பில் படித்தோம். கல்லூரி காலங்களில் மேடைகளில் ஒரு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன் என தெரிவித்தார்.

Also Read: நயன்தாரா குறித்தும் அவர் காதல் குறித்தும் நடிகை குட்டி பத்மினி பேசிய வீடியோ வைரலாகி வருகிறது

ஒருதலை காதலியை பார்த்தீர்களா:

அடுத்ததாக  அந்த ஒருதலை காதலியை சினிமாவுக்கு வந்த பின் பார்த்தீர்களா என் செய்தியாளர் மற்றொரு கேள்வி எழுப்பினார். அதற்கு சிரித்துக் கொண்டே, பார்த்தேன் ஆனால் பேசவில்லை, அப்போது இளையராஜாவின் இசை மனதில் ஓடியது. ஆனால் அந்த பெண்ணுடன், அந்த பையன் கூட இல்லை என்று நகைச்சுவையாக பேசினார். கல்யாணம் அந்த பெண்ணிற்கு நடந்ததா இல்லையா என்று யாரிடமும் நான் பேசவில்லை, அப்படியே மூடி மறைச்சிட்டேன் என சிரிப்புடன் பேசினார்.

Also Read:மனைவியின் காதலன் இதுவரை என் வீட்டில் வசித்து வருகிறார் என ‘பிக் பாஸ்’ நடிகர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola