கோலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை நயன்தாரா. தொகுப்பாளினியாக தனது கெரியரை துவங்கிய நயன்தாரா இன்று கோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படுவது அவரின் கடின உழைப்பிற்கும் விடா முயற்சிக்கும் கிடைத்த வெற்றி எனலாம். நயன்தாரா இன்று வெற்றி நாயகியாக கொண்டாடப்பட்டாலும் அவர் மீது கடந்த காலங்களில் எழுந்த விமர்சனங்களும் ஏராளம் . குறிப்பாக உச்ச நடிகையாக இருந்த சமயத்தில் அவர் நடிகர் பிரபுதேவாவுடன் காதல் வலையில் விழுந்தார்.


அதனை டாட்டூ மூலம் பொது வெளியிலும் வெளிச்சம் போட்டு காட்டியிருந்தார். அது சினிமா துறையிலும் பலருக்கு முக சுளிப்பை ஏற்படுத்தியது. தற்போது விக்னேஷ் சிவனுடன் பல வருடங்களாக உறவில் இருக்கும் நயன்தாரா விரைவில் அவரை திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சினிமாவில் மூன்று தலைமுறைகளாக நடித்து வரும் நடிகை குட்டி பத்மினி , நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்குமான காதல் தனக்கு அதிர்சியாக இருந்தது என வெளிப்படையாக பகிர்ந்திருக்கிறார். 






அதில் “நயன்தாரா உச்ச நடிகையாக இருந்த பொழுது இதை சொல்லும் பொழுது நான் ரொம்ப பயந்துட்டேன். ஏன் இப்படி தப்பு பண்ணுறா ? ஏன் இவ்வளவு அவசரப்படுறா  அப்படினு வருத்தப்பட்டேன். ஏன்னா அப்போ அவங்க டாப் நடிகையா இருந்தாங்க கொஞ்சம் வெயிட் பண்ணியிருக்கலாமேனு தோணுச்சு. அதே டாப்ல இருந்த சமயத்தில்தான் நடிகை நதியாவும் திருமணம் பண்ணினாங்க. குழந்தைகள் நல்லா வளர்ந்த பிறகு மீண்டும் சினிமாவில் எண்ட்ரி கொடுத்து கலக்கிட்டு இருக்காங்க. ஆனால் அவங்க சரியான முடிவு எடுத்திருந்தாங்க.  நான் ஏன் நயன்தாரா எடுத்த முடிவு தப்பு அப்படினு ஃபீல் பண்ணேனா பிரபுதேவா சார் ஏற்கனவே திருமணம் ஆனவர், அந்த வாழ்க்கையை அழித்து இவங்க திருமணம் பண்ணனுமா ...அந்த சாபம் இவங்களுக்கு தேவையா அப்படினு தோணுச்சு. இப்போ விக்னேஷ் சிவனுடனான உறவில் பார்க்கும் பொழுது சந்தோஷமா இருக்கு. அவங்களுக்கு நான் அம்மா மாதிரி வீட்டிற்கு வந்து பலமுறை சாப்பிட்டு இருக்காங்க.ஆனாலும் அந்த தோல்விகளில் இருந்து உடைந்து போகமால் , என்ன ஒரு டிரான்ஸ்ஃபர்மேஷன் கொடுத்துருக்காங்க.20 வருடங்களாக சினிமா துறையில்  சாதிப்பது அத்தனை எளிதான காரியம் அல்ல “ என்றார் குட்டி பத்மினி