தப்பிக்க வழியே இல்ல...அல்லு அர்ஜூனுக்கு எதிராக காவல்துறை வெளியிட்ட வீடியோ ஆதாரம்

புஷ்பா 2 கூட்ட நெரிசலில் உயிரிழந்த பெண்ணிறுகு முழுக்க முழுக்க அல்லு அர்ஜூனின் அலட்சியமே காரணமாக கருதப்படும் நிலையில் தற்போது அவருக்கு எதிராக வீடியோ ஆதாரங்கள் வெளியாகியுள்ளன

Continues below advertisement

புஷ்பா 2 கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் உயிரிழந்த சர்ச்சை தற்போது பூதாரகரமாக வெடித்துள்ளது. முன்பு அல்லு அர்ஜூன் பக்கம் ஆதரவு தெரிவித்த ரசிகர்கள் தற்போது அவருக்கே எதிராக திரும்பியுள்ளார்கள். மேலும் உஸ்மானியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் அமைப்பினர் அல்லு அர்ஜூன் வீட்டின் முன்பு கல்வீச்சு நடத்தியது இந்த சர்ச்சையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

அல்லு அர்ஜூனுக்கு எதிரான வீடியோ ஆதாரம் 

போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளில்லாமல் அல்லு அர்ஜூன் திரையரங்கத்திற்கு வந்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. அல்லு அர்ஜூனை, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க ஹைதராபாத் நாம்பள்ளி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகு அல்லு அர்ஜூனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது தெலங்கானா உயர்நீதிமன்றம்.

இந்த நிகழ்விற்கு முழுக்க முழுக்க அல்லு அர்ஜூனின் அகம்பாவம் தான் காரணம் என தெலங்கானா முதலமைச்சர் குற்றம்சாட்டினார். 

பத்து திரையரங்கத்திற்கு மேல் இருக்கும் பகுதியில் பாதுகாப்பு கொடுக்க முடியாது என காவல் துறையினர் படக்குழுவிடம் தெரிவித்தும் அல்லு அர்ஜூன் கேட்காமல் ஷோ காட்டிக்கொண்டு திரையரங்கத்திற்கு வந்ததாக ரேவந்த் ரெட்டி குற்றம்சாட்டினார். திரையரங்கை விட்டு வெளியேறினால் மட்டுமே தங்களால் கூட்டத்தை கட்டுபடுத்த முடியும் அதனால் திரையரங்கைவிட்டு வெளியேறும் படி கேட்டும் அல்லு அர்ஜூன் மறுத்துவிட்டார். பின் ஏ.சி.பி மற்றும் டி.சி.பி இருவரும் சேர்ந்து அல்லு அர்ஜூன் வெளியேற வேண்டும் இல்லை என்றால் அவரது கைது செய்ய வேண்டியதாக இருக்கும் என்று கூறியபின்னரே அவர் கிளம்பியதாக ரேவந்த் தெரிவித்திருந்தார். 

தற்போது இந்த நிகழ்வின் வீடியோவை தெலங்கானா காவல்துறை வெளியிட்டுள்ளது. ஒருபக்கம் சட்டப்பூர்வமாகவும் இன்னொரு பக்கம் மக்கள் எதிர்ப்பு என நிலவரம் அல்லு அர்ஜூனுக்கு எதிராக திரும்பியபடி உள்ளது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola