ஹாட்ஸ்பாட்
திட்டம் இரண்டு மற்றும் கடந்த ஆண்டு ஜி.வி பிரகாஷின் அடியே ஆகிய படங்களை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் (Vignesh Karthik) அடுத்தபடியாக இயக்கிய படம் ஹாட்ஸ்பாட் (Hotspot). இப்படத்தில் கெளரி கிஷன், ஆதித்யா பாஸ்கர், சாண்டி மாஸ்டர், ஜனனி ஐயர், அம்மு அபிராமி, கலையரசன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். சதீஷ் ரகுநாதன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். நான்கு கதைகளைக் கொண்ட இந்தப் படம் சுவாரஸ்யமான திரைக்கதையுடன் எடுக்கப்பட்டிருப்பதாக விமர்சகர்கள் கருத்து கூறியுள்ளார்கள். இப்படம் கடந்த மார்ச் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
திரையரங்கில் சர்ச்சையை கிளப்பிய ஹாட்ஸ்பாட்
ஹாட்ஸ்பாட் படத்தின் டிரைலர் வெளியானதைத் தொடர்ந்து படத்தின் மீது நெகட்டிவ் அபிப்பிராயங்கள் ஏற்பட்டது. அடல்ட் கண்டண்ட் அதிகம் இருக்கும் என்று இப்படம் குடும்ப ரசிகர்கள் பார்ப்பதற்கு ஏற்ற படம் இல்லை என்கிற கருத்து ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியில் உருவானது. ஆனால் டிரைலரில் இருப்பதற்கு மாறாக படத்தில் அப்படி எந்த காட்சிகளும் இல்லை என்றும் கவனத்தை ஈர்ப்பதற்காகவே டிரைலரை அப்படி வெளியிட்டதாக படத்தில் இயக்குநர் தெரிவித்திருந்தார். மேலும் இந்தப் படம் நன்றாக இருப்பதாக விமர்சகர்கள் தெரிவித்தப் பின்னும் ரசிகர்கள் இந்தப் படத்தை திரையரங்கில் வந்து பார்க்கவில்லை. ரசிகர்கள் ஹாட்ஸ்பாட் படத்தை திரையரங்கத்திற்கு வந்து பார்க்க வேண்டும் என்றும் அப்படி படம் பிடிக்க வில்லை என்றால் என்னை செருப்பால் அடியுங்கள் என்று இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் தெரிவித்திருந்தார்.
ஹாட்ஸ்பாட் ஓடிடி ரிலீஸ்
திரையரங்கில் வெளியான ஒரு மாத காலத்திற்கு பிறகு தற்போது ஹாட்ஸ்பாட் படம் ஓடிடியில் வெளியாக இருக்கிறது . வரும் மே மாதம் 3 ஆம் தேதி இப்படம் டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை திரையரங்கில் பார்க்காத ரசிகர்கள் ஓடிடி தளத்தில் பார்த்து படம் அனைத்து தரப்பினரும் பார்க்கும்படி தான் இருக்கிறது என்று உணர்ந்துகொள்வார்கள் என்று படக்குழுவினர் எதிர்பார்த்து வருகிறார்கள்.
மேலும் படிக்க : Rathnam Movie Review: விறுவிறுப்பாக கெட் அப்பை மாற்றிய விஷால்; தாமிரபரணி அளவு வொர்த்தா? ரத்னம் படத்தின் விமர்சனம்!
Oru Nodi Review : சூப்பர் ட்விஸ்ட் இருக்கு.. ஒரு நொடி படத்தின் விமர்சனம் இங்கே!