2004ம் ஆண்டு இயக்குநர் தரணி இயக்கத்தில் நடிகர் விஜய் , திரிஷா, பிரகாஷ்ராஜ், ஆஷிஷ் வித்யார்த்தி உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த 'கில்லி' திரைப்படம் 20 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச அளவில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. ரீ ரிலீஸ் படங்கள் சமீபத்தில் மிகவும்  ட்ரெண்டிங்காகி பட்டையை கிளப்பி வருகிறது. அந்தவகையில் இதுவரையில் அதிகம் வசூல் செய்த ரீ ரிலீஸ் படம் என்ற பெருமையை கில்லி திரைப்படம் பெற்றுள்ளது. 


 



வசூலில் சாதனை :



அந்த சமயத்திலேயே 50 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. தற்போது 20 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் விஜய் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாக அமைந்து கமர்சியல் ஹீரோவாக அவரின் அந்தஸ்தை உயர்த்தியது. வரும் செப்டம்பர் 5ம் தேதி வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் GOAT திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான விஜய் படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. 


 


ஸ்டாண்ட் காட்சி :


தற்போது கில்லி படம் மிகவும் ட்ரெண்டிங்காக இருந்து வரும் சூழலில் அப்படம் மேக்கிங் சமயத்தில் நடைபெற்ற பல ஸ்வாரஸ்யமான தகவல்கள் தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகின்றன. அந்த வகையில் கில்லி படத்தில் ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சமே இல்லை. அதில் ஒரு ஸ்டாண்ட் காட்சியில் வீட்டின் மாடியில் பெரிய பைட் சீன் ஒன்று அமைக்கப்பட்டு இருக்கும். அந்த காட்சியில் விஜய்க்கும், நடிகர் நந்தா சரவணனுக்கும் இடையில் நடக்கும் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு இருக்கும். அந்த அனுபவம் குறித்து நந்தா சரவணன் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார்.


 



ரிஸ்க் எடுத்த விஜய் :


நான் மொட்டை மாடியில் ஓடிக்கொண்டு இருப்பேன். அவர் என்னை துரத்தி கொண்டே வருவார். அப்போது ஒரு மாடியில் இருந்து இன்னொரு மாடிக்கு ஜம்ப் பண்ணனும். நான் ரோப் போட்டுக்கொண்டேன். அவர் ரோப் வேண்டாம் என சொல்லிவிட்டார். ரொம்ப கூல்லா ஜம்ப் பண்ணிட்டார். படம் பார்த்தாலே தெரியும். மொட்டைமாடியில் இருந்து இன்னொரு மாடிக்கு இடையில் ஒன்பது முதல் பத்து அடி இருக்கும். ரொம்ப ரிஸ்க்கான ஜம்ப்  அது. நான் முதலில் ரோப் போட்டு ஜம்ப் பண்ணிடுவேன். ஆனா அவர் அப்படியே கேஷுவலா ஜம்ப் பண்ணி வருவார் என நடிகர் நந்தா சரவணன் அந்த காட்சி ஷூட்டிங் பற்றி பகிர்ந்து இருந்தார். 


ஸ்டண்ட் காட்சிகளில் கூட இவ்வளவு ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார் நடிகர் விஜய் என்பது அவரின் ரசிகர்களை நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.