Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Oru Nodi Review : சூப்பர் ட்விஸ்ட் இருக்கு.. ஒரு நொடி படத்தின் விமர்சனம் இங்கே!

தமன் குமார், எம்.எஸ்.பாஸ்கர், வேல ராமமூர்த்தி, பழ.கருப்பையா, ஸ்ரீரஞ்சனி, கருப்பு நம்பியார், தீபா ஆகியோர் நடிப்பில் மணிவர்மன் இயக்கத்தில் உருவான “ஒரு நொடி” இன்று (26 ஏப்ரல்) வெளியாகியுள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
இப்படம் எப்படி இருக்கும் என்பதை டைட்டிலே நன்றாக விளக்கிவிட்டது. வாழ்க்கையின் ஒரு நொடியில் நடக்கும் விஷயங்கள் கூட ஒட்டுமொத்த சூழலையும் மாற்றும் என்பதே இக்கதையின் சாராம்சம்

மகளின் திருமணத்திற்காக கடன் வாங்கும் தந்தை காணாமல் போவது, மற்றொரு இளம் பெண் கொலை செய்யப்படுவது என இரு விதமான வழக்குகளை காவல் அதிகாரியான நாயகன் கையாள்கிறார்.
இந்த இரண்டு வழக்குகளிலும் முழுமையாக என்னென்ன நடந்தது என்பதை சஸ்பென்ஸ் திரில்லராக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ஹீரோ தமன் குமாரின் நடிப்பு, தங்க பதக்கம் சிவாஜி கணேசனில் ஆரம்பித்து போர் தொழில் அசோக் செல்வன் வரை, கோலிவுட்டின் போலீஸ் கதாபாத்திரங்களை நினைவுப்படுத்தும் விதமாக அமைந்தது. மற்ற கலைஞர்களின் நடிப்பும் செம்மையாக இருந்தது.
ஒரு சில காட்சிகள் போர் அடித்தாலும், மொத்தமாக பார்க்கும் போது, “ஒரு நொடி” படம் சம்மர் ஹிட்தான் என்று சொல்ல வேண்டும். நிச்சயமாக குடும்பம், நண்பர்களுடன் சென்று இந்த படத்தை ரசிக்கலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -