ஹிப்ஹாப் தமிழா

சுயாதீனமாக ஆல்பம் பாடல்களை வெளியிட்டு வந்தவர் ஹிப்ஹாப் தமிழா.  அவ்வப்போது ஒவ்வொரு பாடல்களை வெளியிட்டு தனது லிரிக் மற்றும் ராப் இசையால் ஒரு சின்ன ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்திருந்தார். இதனைத் அனிருத் இசையில் ஒரு சில பாடல்களை பாடினார் . சுந்தர் சி இயக்கிய ஆம்பள படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். தனி ஒருவன் , கலகலப்பு , அரண்மனை 4 பாகங்கள் , கதகளி , இன்று நேற்று நாளை உள்ளிட்டப் படங்களுக்கு இசையமைத்து ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.

Continues below advertisement

இசையமைப்பாளரைத் தொடர்ந்து மீசையை முறுக்கு படத்தின் மூலம் நடிகராகவும் இயக்குநராகவும் அறிமுகமானார். இப்படம் இஞ்ஜினியரிங் படித்த ஆதி இசையின் மேல் ஆர்வம் ஏற்பட்டதும் பின் ஒரு இசையமைப்பாளராக ஆவதற்கு எதிர்கொண்ட சவால்களை கற்பனை கலந்த படமாக உருவாக்கியிருப்பார் ஆதி.

தொடர்ச்சியாக இசையமைப்பதுடன் படங்களில் நாயகனாகவும்  நடித்து வருகிறார் . ஹிப்ஹாப் தமிழா இயக்கத்தில் மீசையை முறுக்கு , நட்பே துணை ஆகிய இரு படங்கள் பெரியளவில்  வெற்றிபெற்றன. சமீபத்தில் வெளியான அன்பறிவு , வீரன் உள்ளிட்டப் படங்கள் பெரியளவில் கவனம் பெறவில்லை. தற்போது ஹிப்ஹாப் தமிழா நடித்துள்ள படம் பி.டி சார்.

Continues below advertisement

பிடி சார்

வேல்ஸ் இன்டர்நேஷ்னல் சார்பாக  ஐசரி கணேசன் தயாரித்து  கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பி.டி.சார் , சிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் மூலமாக கவனம் ஈர்த்த காஷ்மீரா இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். கடந்த ஆண்டு தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு இந்த அண்டு பிப்ரவரியில் முடிவடைந்தது. இப்படியான நிலையில் இப்படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். இப்படம் அவர் இசையமைக்கும் 25 ஆவது படம் என்பது குறிப்பிடத் தக்கது .  இப்படத்தின் குட்டி பிசாசு என்கிற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. 

இசையமைப்பாளராக 25 படத்தை தொட்டுள்ள ஹிப்ஹாப் தமிழா இன்னும் சில வருடங்களில் 25 ஆவது படத்திலும் நடித்து விடுவார் என்று எதிர்பார்க்கும் அளவிற்கு சினிமாவில் தன்னை பிஸியாக வைத்திருக்கிறார் ஆதி.


மேலும் படிக்க : Kurangu Pedal Movie Review: நாஸ்டால்ஜியாவை தூண்டும் சிவகார்த்திகேயன் படம்... குரங்கு பெடல் திரை விமர்சனம்!