Gayathri Raguram: மொட்டை கெட்டப்பில் காயத்ரி ரகுராம் - எடிட் போட்டோவா என கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்

மொட்டை அடித்து இருக்கும் காயத்ரி ரகுராமை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்

Continues below advertisement

Gayathri Raguram: திருப்பதிக்கு மொட்டியடித்த நடிகை காயத்ரி ரகுராமின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Continues below advertisement

நடிகையும், நடன இயக்குநரும், அரசியல்வாதியுமான காயத்ரி ரகுராம் பிரபல நடன இயக்குநர் ரகுராம் என்பவரின் மகள். இவர் 2002ம் அண்டு வெளிவந்த சார்லி சாப்ளின் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து விசில், விகடன், பரசுராம், வானம், காதலில் சொதப்புவது எப்படி, இது என்ன மாயம், தாரை தப்பட்டை, அருவம், யாதுமாகி நின்றாய் படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான ஓடி விளையாடு பாப்பா, மிஸ்டர் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்றதுடன், 2017ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். 

நடிப்பை தாண்டி அரசியல் ஆர்வம் காட்டிய இவர் 2014ம் ஆண்டு அமித்ஷா முன்னில்லையில் பாஜகவில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார். பின்னர் 2015ம் ஆண்டு தமிழக பாஜக செயலாளராக காயத்ரி ரகுராம் நியமிக்கப்பட்டார். பாஜகவில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்தி கொண்ட காயத்ரி ரகுராம் தேர்தல் பிரச்சாரங்களிலும் ஈடுபட்டு வந்தார். பாஜகவுக்கு ஆதரவாக குரல்கொடுத்து வந்த நிலையில் தமிழக பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி சர்ச்சையை கிளப்பினார். பாஜகவில் இருந்து கொண்டு அந்த கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், மாநில தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார். 

காயத்ரி ரகுராமின் இந்த பேச்சு சர்ச்சையான நிலையில், கடந்த ஜனவரி மாதம் அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். கட்சி நடவடிக்கை குறித்து பேசிய காயத்ரி ரகுராம், தனது தரப்பு விளக்கத்தை கேட்காமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தனிப்பட்ட முறையில் தன் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், கட்சிக்கு எதிராக இல்லாமல் தன்னிச்சையாக தான் செயல்பட்டதாகவும் விளக்கம் அளித்திருந்தார். 

மேலும், தமிழக பாஜகவில் நடத்தை பாஜக மேலிடத்தில் கூற உள்ளதாகவும் பேசி இருந்தார். கடந்த ஜூன் மாதம் அண்ணாமலை பேசிய வீடியோ ஒன்றை டிவிட்டரில் பகிர்ந்த காயத்ரி ரகுராம், அவர் மிகவும் மோசமானவர், பெண்களை தவறாக பேசுபவர், அண்ணாமலை கிசுகிசு பேசுபவர் என கடுமையாக விமர்சித்திருந்தார். தொடர்ந்து டிவிட்டரில் பாஜகவும், அண்ணாமலைக்கு எதிராகவும் கருத்து பதிவிட்டு வரும் காயத்ரி ரகுராம் லேட்டஸ்ட் போட்டோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

மொட்டை அடுத்து கொண்டு, நாமம் போட்டு இருக்கும் காயத்ரி ரகுராம் திருப்பதி, ஓம்நமோ நாராயணா என பகிர்ந்துள்ளார். இதன் மூலம் திருப்பதிக்கு மொட்டை அடுத்துள்ளாரா, இல்லை எடிட் செய்து போட்டோவை பகிர்ந்துள்ளாரா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

மேலும் படிக்க: Jailer Release LIVE : ‘அலப்பற கெளப்புறோம் தலைவரு நிரந்தரம்..’ நாளை வெளியாகும் ரஜினியின் ஜெயிலர்!

Continues below advertisement