நாட்டின்‌ முதன்மை உயர் கல்வி நிறுவனங்களில் படிக்க உள்ள 247 மாணவர்களின் உயர் கல்விச்செலவை தமிழக அரசு முழுமையாக ஏற்றுள்ளது. இதன்மூலம்‌ அம்மாணவ, மாணவியர்‌ உயர்கல்வியை தடையின்றி படிக்க முடியும்‌ என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்துப் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்து உள்ளதாவது:

அரசின் சிறப்புத் திட்டங்கள்

அரசுப்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவர்களின்‌ நலனிற்காக பள்ளிகளில்‌ இணைய வசதிகள்‌, 1 முதல்‌ 5 ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ அரசுப்‌ பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும்‌ முதலமைச்சரின்‌ காலை உணவுத்‌ திட்டம்‌, நான்‌ முதல்வன்‌, மாணவர்களின்‌ கற்றல்‌ திறனை அதிகரித்து தமிழகத்தின்‌ கல்வித்‌ தரத்தினை உயர்த்திட இல்லம்‌ தேடிக் கல்வி, நம்‌ பள்ளி நம்‌ பெருமை, எண்ணும்‌ எழுத்தும்‌, நம்ம ஸ்கூல்‌ பவுண்டேசன்‌, பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு போன்ற சிறப்பு திட்டங்கள்‌, பள்ளிகளின் வகுப்பறைக்‌ கட்டடங்கள்‌, குடிநீர்‌ வசதி, கழிவறைகள்‌, மின்சாதன வசதிகள்‌ போன்ற அடிப்படைக்‌ கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்‌, திறன்‌ வகுப்பறைகள்‌ அமைத்தல்‌, காலியாகவுள்ள ஆசிரியர்‌ பணியிடங்களை நிரப்புதல்‌ போன்ற பல்வேறு திட்டங்களை அரசு சீரிய முறையில்‌ செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில்‌, அரசுப்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவர்கள்‌ நாட்டின்‌ முதன்மை கல்வி நிறுவனங்களில்‌ உயர்கல்வி கற்பதற்காக 2022-23ஆம்‌ ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில்‌, “இந்திய தொழில்நுட்பக்‌ கழகங்கள்‌, இந்திய அறிவியல்‌ கழகம்‌, அனைத்திந்திய மருத்துவ அறிவியல்‌ கழகங்கள்‌ போன்ற புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில்‌ சேர, அரசுப்‌ பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும்‌ வகையில்‌, இந்நிறுவனங்களில்‌ இளநிலைப்‌
பட்டப் படிப்பு பயில்வதற்கான முழுச்‌ செலவையும்‌ மாநில அரசே ஏற்கும்‌” என்று அறிவிக்கப்பட்டது.

கல்விச் செலவு முழுவதையும்‌ ஏற்கும் தமிழ்நாடு அரசு

அந்த அறிவிப்பினை செயல்படுத்திடும்‌ வகையில்‌, நாட்டின்‌ முதன்மை உயர் கல்வி நிறுவனங்களான இந்திய தொழில்நுட்ப கழகம்‌ (ஐஐடி), தேசிய தொழில்நுட்ப கழகம்‌ (என்ஐடி), நிஃப்ட், இந்திய கடல்சார்‌ பல்கலைக்கழகம்‌ (IMU), தேசிய சட்டப்‌ பல்கலைக்கழகம்‌, தேசிய தடய அறிவியல்‌ பல்கலைக்கழகம்‌ போன்ற முதன்மை கல்வி நிறுவனங்களில்‌ கல்வி பயின்றிட JEE, CUET, National Aptitude Test in Architecture போன்ற நுழைவுக்‌ தேர்வுகளில்‌ இந்த கல்வியாண்டில்‌ வெற்றி பெற்றுள்ள சுமார்‌ 247 அரசுப்‌ பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு, அவர்களின்‌ கல்விச்‌ செலவினத்‌ தொகை முழுவதையும்‌ தமிழ்நாடு அரசே ஏற்றுக்‌ கொள்கிறது.

யாரெல்லாம் பெறலாம்?

6 ஆம்‌ வகுப்பு முதல்‌ 12 ஆம்‌ வகுப்பு வரையில்‌ அரசுப்‌ பள்ளிகளில்‌ பயின்று, மத்தியக் கல்வி நிறுவனங்களுக்கான நுழைவுத் தேர்வில் வென்ற மாணவர்கள்‌ இந்த உதவியைப்‌ பெறலாம்‌.

இதன்மூலம்‌ அம்மாணவ, மாணவியர்‌ உயர்கல்வியை தடையின்றி பயில இயலும்‌ என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

தேர்வான மாணவர்களின் பட்டியல்

S.No

Institution

Entrance exam

Number of students (AY 2021 – 22)

Number of students (AY 2022 – 23)

1

Indian Institute of Technology

JEE Advanced

1

6

2

NIT, IIIT, NIFTEM etc.,

JEE-Mains

13

77

3

National Forensics Science University

NFAT (National Forensics Admission Test)

0

6

4

Medical colleges

NEET (MBBS & BDS)

49

8

5

Taiwan State Universities – fully funded scholarship

Not applicable

0

2

6

Indian Maritime University

IMU-CET

0

6

7

National Law University

CLAT

4

9

8

School of Excellence in Law

Not applicable

1

7

9

National Institute of Fashion Technology

NIFT-GAT

0

27

10

Central Universities

CUET

6

20

11

School of Architecture

NATA (qualified)

1

69

12

Indian Institute of Science, Education and Research

IISER (qualified)

0

10

 

Total

75

247