சுதா கொங்கரா இயக்கத்தில் உண்மை கதையினை மையமாக கொண்டு சூர்யாவினை வைத்து இயக்கிய திரைப்படம் தான் சூரரைப்போற்று. கிராமத்தில் பிறந்து எப்படியாவது விமானத்தினை இயக்கி விட வேண்டும் என்று துடிப்புடன் கதாநாயகனாக வலம் வரும் நடிகர் சூர்யா, எப்படி வெற்றி பெறுகிறார் என்பர் தான் கதைக்களம். கதாநாயகியாக மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி சிறப்பாக நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தார்.  


இப்படம்  ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தில் இருந்து சிலப் பகுதிகளை எடுத்துக்கொண்டு தமிழ் மொழியில் மட்டுமல்லாமல், கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியான சூரரைப்போற்று ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்டது. ஒடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பினை பெற்றுள்ள இந்த திரைப்படம் தற்போது  தற்போது மற்றுமொரு சாதனை ஒன்றினை படைத்துள்ளது.




மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில்  சிறந்த திரைப்படத்துக்கான விருதை சூரரை போற்று பெற்றுள்ளது. அதேபோல் சிறந்த நடிகருக்கான விருதை சூரரை போற்று திரைப்படத்துக்காக சூர்யா பெற்றுள்ளார். இந்த தகவலை திரைப்பட விமர்சர்கர்கள் பலர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளனர்.


முன்னதாக, ஐஎம்டிபி ( IMDB) என்ற ரேடிங் தளத்தில் உலகளவில்  நல்ல படங்களுக்கு ரசிகர்கள் கருத்துத் தெரிவிப்பதன் அடிப்படையில் எந்த படம் அதிக அளவு ரசிகர்களை கவர்ந்துள்ளது என்பதை கணக்கிட்டு பட்டியலிடுவது வழக்கமான ஒன்று. அந்த வரிசையில் இந்த ஆண்டு நடைபெற்ற ரேடிங்கில் சூரரைப் போற்று திரைப்படம் 10க்கு 9.1 ரேட்டிங் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.