தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விக்ரம். இவர் பல்வேறு கெட்டப்களில் அசத்தியுள்ள திரைப்படம் கோப்ரா. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதியாக வீடு திரும்பிய விக்ரம் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இந்த படத்தில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான்பதான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் இர்பான் பதான் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் அவர் தன்னுடைய 6 வயது மகன் இம்ரான்கான் பதானுடன் பங்கேற்றார்.
இர்பான்பதான் முதன்முறையாக கோப்ரா படம் மூலமாக நடிகராக கோலிவுட் வட்டாரத்தில் அறிமுகமாகிறார். சஸ்பென்ஸ் திரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் விக்ரமை கண்டுபிடிக்கும் ஒரு உயர்ந்த பொறுப்பில் உள்ள அதிகாரியாக இர்பான்பதான் நடித்துள்ளார்.
மேலும் படிக்க : Ram Pothineni Interview: அஞ்சான் கொடுத்த அடி.. தோல்வியில் துவண்ட லிங்கு... வாய்ப்பு கொடுத்தது ஏன்.. ராம் பொத்தினேனி பேட்டி..!
இந்த நிகழ்ச்சியில் பேசிய இர்பான்பதான், எப்படி இருக்கீங்க சென்னை என்றார். பின்னர், கோப்ரா படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என்றதும் ஒப்புக்கொண்டேன் என்றார். இந்திய அணியின் சிறந்த ஆல்ரவுண்டரான இர்பான் பதானுக்கு தற்போது 37 வயதாகிறது, 2003ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அறிமுகமாகிய இர்பான் பதான் 2012ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக ஆடியுள்ளார். அதன்பின்னர், 2017ம் ஆண்டு வரை ஐ.பி.எல். போட்டிகளில் ஆடினர்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் இந்திய அணிக்காக சிறந்த பந்துவீச்சாளர்களை உருவாக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறார். கிரிக்கெட் வீரராக ஜொலித்த இர்பான்பதான் நடிகராக ஜொலிக்கவும் அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவரது சகோதரர் யூசுப்பதானும் கிரிக்கெட் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. கோப்ரா படத்தில் விக்ரம், இர்பான் பதானுடன் கே.ஜி.எப். ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிக்குமார், மியா ஜார்ஜ், மிருணாளினி ரவி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண : Vikram Speech: ”லைஃப்ல எவ்வளவோ பார்த்துட்டேன், இதெல்லாம் ஒன்னும் பண்ணாது”... ரசிகர்களை தேற்றிய விக்ரம்..!
மேலும் செய்திகளை காண : Cobra : 'ஒரு கலைஞர் கையில் தமிழ்நாடு இருக்கிறது என்பதில் எனக்கு இருமாப்பு உண்டு' கோப்ரா இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஆனந்தராஜ்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்