தமிழின் பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் வி.ஜே, ஆஷிக். நிகழ்ச்சித் தொகுப்பாளர், மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட், நடிகர் என பன்முகத்திறன் கொண்ட ஆஷிக்கின் மனைவி சோனு. இந்த நிலையில், தற்போது சோனு கர்ப்பம் தரித்துள்ளார்.




தந்தையாக உள்ள மகிழ்ச்சியான செய்தியை ஆஷிக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகுந்த மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அவர் அதில் பதிவிட்டிருப்பதாவது, மிகச்சிறந்த உணர்வு. எல்லாவற்றிற்கும் நன்றி. எனனோட வாழ்க்கையில நடக்குற எல்லா விஷயமும் உங்களுக்கு தெரியாம இல்ல. அந்த வகையில என்னோட வாழ்க்கையில எங்களோட வாழ்க்கையில ரொம்ப முக்கியமான தருணம் இது. அதுனால, உங்க ஆசிர்வாதங்கள் மற்றும் அன்பை கொடுங்க.”


இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.






விஜே ஆஷிக் ஆங்கராக தன்னுடைய கேரியரை பிகைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலில் தொடங்கினார். கலாட்டா.காம் யூ டியூப் தொலைக்காட்சியிலும் தனது நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியாற்றினார். யோகிபாபு நடித்த தர்மபிரபு படத்தில் நடிகராகவும் அறிமுகமானார்.




இந்த படத்திற்கு பிறகு ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, குர்கா, கண்ணாடி, போதை ஏறி பாதை மாறி, அலைகா, அன்புள்ள கில்லி ஆகிய படங்களில் நடித்துள்ளார். வி.ஜே ஆஷிக் தந்தையாக இருப்பதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


மேலும் படிக்க : Tamil TV Serial TRP Rating: டி.ஆர்.பி. ரேட்டிங்கில் அதிரடி.. நம்பர் 1 இடத்தில் கயல்.. அடுத்தடுத்து இந்த சீரியல்கள்தான்..


மேலும் படிக்க : Rajasekar : திடீரென்று இறந்த கணவர்.. நோட்டீஸ் ஒட்டிய வங்கி.. கலங்கி நிற்கும் ராஜசேகரின் குடும்பம்..


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண