திறமையான ஒளிப்பதிவாளராகவும், இயக்குநராகவும் வலம் வந்தவர் நடிகர் ராபர்ட் ராஜசேகர். பிரபல நடிகையை மணந்து அந்த வாழ்கை தோல்வியில் முடிய, அடுத்ததாக தாராவை திருமணம் செய்து கொண்டார். ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து ஓய்வு பெற்ற இவர், சீரியல் பக்கம் வந்தார். சரவணன் மீனாட்சி சீரியல் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.




இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு திடிரென்று இறந்தார். இறக்கும் போது வடபழனியில் இருந்து வீடு ஒன்றை வாங்கிய ராஜசேகர், அந்த வீட்டிற்கான பாதித்தொகையை வீடு கட்டியவருக்கு கொடுத்து, மீதி பணத்திற்கு  தனியார் வங்கியில் லோன் வாங்கியிருந்தார். கணவர் சென்ற பிறகு தாராவால் மீதிக்கடனை செலுத்த முடியவில்லை.


இதனையடுத்து கடனை திருப்பி தருமாறு வங்கி நெருக்கடி கொடுத்து இருக்கிறது. இந்தத்தம்பதிக்கு பிள்ளைகள் யாரும் இல்லாத நிலையில், நெருக்கடி காரணமாக எங்கெங்கோ உதவி கேட்டு அலைந்திருக்கிறார். ஆனால் யாரும் உதவ முன்வரவில்லை. அதில் கிடைக்கும் வாடகைப்பணத்தை வைத்து காலத்தை தள்ளி வரும் நிலையில், அந்த வீட்டிற்கு நோட்டீஸ் ஒட்டி  ஏலம் விட முடிவு செய்திருக்கிறது வங்கி. இதனால் உதவிகேட்டு நிற்கிறார் தாரா.